பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46
சங்க இலக்கியத்
 


"கோட் சுறா வழங்கும் வான்கேழ் இருங்கழி
மணிஏர் நெய்தல் மாமலர் கிறையப்
பொன்னேர் நுண்தாது புன்னை தூஉம்
வீழ்த்தாள் தாழைப் பூங்கமழ்காணம்"

-நற். 78

நெய்தல் விடியற்காலையில் மலரும் எனவும், அதில் தேன் மிகுந்திருக்குமெனவும், அதில் வண்டினம் மொய்க்குமெனவும், அதனை நாரை உண்பதும் எருமை மேய்வதும் உண்டு எனவும், மாலையில் இம்மலர் கூம்பும் எனவும் புலவர் பெருமக்கள் கூறுப. நீலமான நெய்தற் பூவிதழ்களுடன் அடம்பின் (அடம்பு) செவ்விய பூக்களை விரவித் தொடுத்து மகளிர் கூந்தலில் அணிவர். இதன் நறிய மலர்களைச் செருந்திப் பூக்களுடன் விரவி மாலையாகப் புனைந்து ஆடவரும் அணிவர். நெய்தற் பூவின் புறவிதழ்களை ஒடித்து மாலை கட்டிச் சூடுதலுக்கு 'நெய்தல் நெறித்தல்' என்று பெயர்.

"------------------ தண்புலர்
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தலம் புதுமலர் மாந்தும்"

-அகம். 100. 15-17

"முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்"

-திருமுரு. 73-76

"அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
நெடுங்தொடை வேய்ங்த நீர்வார் கூந்தல்"

-குறுந். 401 , 1-2

"நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரை இக்
கைபுனை நறுங்தார் கமழும் மார்பன்"

-ஐங்குறு. 182

"வள்இதழ் நெய்தல் கூம்பப் புள் உடன்
கமழ்பூம் பொதும்பர்க் கட்சிசேர
செல்சுடர் மழுங்க.........

-நற். 117, 3-5

நீலநிறமுள்ள பெரிய நெய்தல் மலர் பல்லாற்றானும் செங்கழு நீர்ப் பூவைப் போன்றது. இதழ் வளவியதாய் அகன்று இருக்கும். நறுமணத்துடன் தேன் சுரக்கும் இயல்பிற்று. புறவிதழ்களின் உட்புறம் நீலமானது. வெளிப்புறம் சற்றுப் பசிய நிறமானது. நெய்தல் முகையில் இவை திருகு அமைப்பில் அகவிதழ்களை மூடிக் கொண்