பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

618

சங்க இலக்கியத்

இலை : எதிரடுக்கில் பளபளப்பான தனி இலைகள். அடியும், நுனியும் குறுகிய முட்டை வடிவான இலை.
மஞ்சரி : கலப்பு மஞ்சரியாகவும், நுனிவளராப் பூந்துணராகவும் காணப்படும். இலைக் கோணத்தில், கிளைகளின் நுனியில் உண்டாகும்.
மலர் : வெண்ணிறமானது; இருபாலானது.
அல்லி, புல்லி வட்டங்கள் : இத்தொகுதியில் உள்ள பூக்களில் புல்லி வட்டமும், அல்லி வட்டமும் ‘பீரியாந்த்’ (Perianth) என்று வழங்கப்படும். 4 இதழ்கள், மேற்புறத்தில் நுண்ணிய மயிர்கள் நீண்டிருக்கும். இவை துய்யெனப்படும். 4 இதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாகவும், மேலே புனல் போன்றுமிருக்கும்.
மகரந்த வட்டம் : 4 அல்லது 5 குட்டையான தாதிழைகள் மலரிதழ்களின் அடியில் ஒட்டியிருக்கும். மலர்த் தட்டு உண்டு. தாதுப்பை முட்டை வடிவானது.
சூலக வட்டம் : மலரடிச் சூலகம். 2-3 தொங்கு சூல்கள். சூலகமுடி நீளமானது. சூல்முடி 2-3 பிளவானது.
கனி : சதைக்கனி ‘ட்ரூப்’ எனப்படும். ‘என்டோகார்ப்’ தடித்த கம்பளம் போன்றது. விதை சற்று உருண்டை வடிவானது. ஆல்புமின் உள்ளது. கரு மெல்லியது. கருமுளை வித்திலைகளைக் காட்டிலும் நீளமானது.

சந்தன மரம் நீலகிரி, மைசூர் மலைகளிலும், காடுகளிலும் வளர்கிறது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் வளர்ந்த பின்னர், இம்மரத்தின் பூங்கொத்தில் ஒரு நோய் உண்டாகின்றது. இதற்கு ‘ஸ்பைக்’ நோய் (துணர் நோய்) என்று பெயர். இந்நோய்க்கு ஆளான மரங்கள் பட்டுப் போகும்.

சந்தன மரத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே சந்தன எண்ணெய் அதன் மரத்தண்டில் உண்டாகின்றது. மரத்திலும்