பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

623

காஞ்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே
(Monochlamydeae)
யூனிசெக்சுவேலீஸ் (unisexuales)
தாவரக் குடும்பம் : யூபோர்பியேசி (Euphorbiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ட்ரீவியா (Trewia)
தாவரச் சிற்றினப் பெயர் : நூடிபுளோரா (nudiflora)
சங்க இலக்கியப் பெயர் : காஞ்சி
தாவர இயல்பு : குறுமரம். தழைத்துக் கிளைத்து வளரும். நீர் நிலைகளுக்கு ஓரமாக வளரும்.
இலை : அகன்ற இதய வடிவான தனியிலை., எதிரடுக்கானது.
மஞ்சரி : இருபாலானது. இலையுதிர்ந்து புத்திலை விடுமுன் மஞ்சரி வெளி வரும். ஆணிணரும், பெண்ணிணரும் மிக நீளமானவை. இணர் தொங்கிக் கொண்டு வளரும். இவ்வுண்மையைப் புலவர் கூறுவர்.
மலர் : ஆணிணரில் மலர்கள் மலிந்து உண்டாகும். பெண்ணிணரில் பூக்கள் மிகக் குறைவு. பூக்கள் நீல நிறமானவை.
ஆண் மலர் : ஆண் மலரின் அரும்பு உருண்டை வடிவானது.
புல்லி : 3-4 உட்குழிந்த புறுவிதழ்கள் விரிந்து மலரும்.
பெண் மலர் : 3-5 புறவிதழ்கள் தழுவிய அமைப்பானவை.
அல்லி : இரு வகை மலர்களிலும் அகவிதழ் இல்லை.
மகரந்த வட்டம் : ஆண்மலரின் பல தாதிழைகள் பொன்னிறத் தாதுக்களைச் சொரியும்.