பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

627

மலர்களும், பெண்பால் மலர்களும் தனித் தனியாக இருக்கும். இம்மலரை யாரும் சூடிக் கொள்வதில்லை. இருப்பினும் கபிலர் இம்மலரையும் தலைவியும், தோழியும் சேகரித்ததாகக் கூறுவர்.

“தில்லை பாலை கல்லிவர் முல்லை”-குறிஞ். 77

இதன் குரோமோசோம் எண்ணிக்கை கண்டு சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை.

தில்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஒரு பால் மலருடையவை
யூனிசெக்சுவேலீஸ்
தாவரக் குடும்பம் : யூபோர்பியேசி (Euphorbiaceae)
தாவரப் பேரினப் பெயர் : எக்ஸ்கொகேரியா (Excoecaria)
தாவரச் சிற்றினப் பெயர் : அகலோச்சா (agallocha)
ஆங்கிலப் பெயர் : புலிப்பால் மரம் (Tiger’s milk tree
தாவர இயல்பு : சிறு மரம். எப்பொழுதும் பசிய இலைகளையுடையது. மரங்கள் காடாக வளரும்.
தாவர வளரியல்பு : கடலோரத்தில் உள்ள மாங்குரூவ் (Mangrove) மரம். உப்பங்கழித் தாவரம்.
இலை : பசிய, மெல்லிய, பளபளப்பான, சிறிய, தனி இலை. சுற்றடுக்கு.
மஞ்சரியும் மலர்களும் : ஆண்பால் மலர், பெண்பால் மலர் என இருவகை மலர்கள் தனித்தனியே உண்டாகும். நுனிவளராப் பூந்துணரில் மலர்க் காம்பின்றி அரும்பும்.