பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

49

நெய்தல்’ எனப் பலரும் பாடுமாறு கண்டு பெருமை உடைய இதழ்களை உடையதாகவே கருதுகின்றார் என்பதும் விளங்கும்.

இருப்பினும், பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியர் (1950) பக். 365 பின்வரும் குறிப்பெழுதுகின்றார்:

“பெருமை உடைய நீலம் நெய்தல் என்னும் இருவகை மலர்களுள், நீலம் சிறப்புடையதாகலின் இவ்வாறு உரை எழுதினார். பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் என்றதற்கு (ஐங்கு. 2-4) அதன் உரையாசிரியர் சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கும் ஊரனென்றது” என்று எழுதியிருத்தல் இதனை வலியுறுத்தும். இக்குறிப்பினை உற்று நோக்கினால் ஐங்குறுநூற்று உரையாசிரியர் நீலம் என்பதற்குக் கருங்குவளை எனப் பொருள் கொண்டதோடமையாமல் ‘சிறப்புடைய கருங்குவளையுடன் சிறப்பில்லாத நெய்தல்’ எனவும் சிறப்புரை செய்துள்ளார் என்பது போதரும். ஆதலின் பத்துப் பாட்டுப் பதிப்பாசிரியரும், ஐங்குறுநூற்று உரையாசிரியரும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் இம்மலர்ப் பெயர்களுக்கு எழுதியுள்ள உண்மை உரையினை எங்ஙனம் அறியாராயினர் என்பதுதான் விளங்கவில்லை.

ஆகவே குவளை என்பது செங்குவளை எனவும், நீலோற்பலமெனவும், செங்கழுநீர்ப்பூ எனவும் வழங்கியுள்ளமை அறியலாம். தில்லையம்பதியிலே கோயில் கொண்டுள்ள அம்மை சிவகாம சுந்தரியின் திருக்கரத்தில் சற்று விரிந்த நீலோற்பல மலர் உள்ளது. இதன் அகவிதழ்கள் புறத்தில் நீலமாகவும் அகத்தில் சிவப்பு நிறமாகவும் இருக்கும். புறவிதழ்கள் கருஞ்சிவப்பாக இருக்கும். கருங்குவளை என்பதுதான் நெய்தல் மலர். இதன் அகவிதழ்கள் கருநீல நிறமானவை. இதனுடைய புறவிதழ்களின் உட்புறம் கருநீலமாக இருக்குமாயினும் வெளிப்புறம் பசு நீலமாக இருக்கும். செங்குவளை, கருங்குவளை, ஆம்பல் எனப்படும் பல வண்ண அல்லிப் பூக்கள் அனைத்தும் தாவரவியலில் (Nymphaea) நிம்பேயா என்னும் (Genus) பேரினத்தைச் சேர்ந்தவை. இவற்றின் இனப் பெயர்கள் (species) வேறுபடும்.

தாவரவியல் கருங்குவளையாகிய நெய்தலை (Nymphaea violacea) நிம்பேயா வயலேசியா எனவும், செங்குவளையாகிய நீலோற்பலத்தை (Nymphaea stellata) நிம்பேயா ஸ்டெல்லேட்டா எனவும், நீலம் என்பதனை (Nymphaea blue) நிம்பேயா புளு எனவும் அல்லியாகிய ஆம்பலை (Nymphaea pubescens)

 

73-5