பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பலா
அர்ட்டோகார்ப்பஸ் இன்டெகிரிபோலியா
(Artocarpus integirifolia,Linn.)

‘பலவு’ எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பலா மரம் இந்திய நாட்டைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் 40 சிற்றினங்கள் உள்ளன. 1500 முதல் 4000 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கில் நன்கு வளரும். வள்ளல் பாரியின் பறம்பு மலையில் உழுது பயிரிடாத பயனுள்ள இம்மரம் தானே வளர்ந்து பயன் கொடுத்தது என்பர் கபிலர்.

சங்க இலக்கியப் பெயர் : பலவு, பலா
தாவரப் பெயர் : அர்ட்டோகார்ப்பஸ் இன்டெகிரிபோலியா
(Artocarpus integirifolia,Linn.)

பலா இலக்கியம்

இம்மரக்கனியில் உண்டாகும் சுவை மிக்க சுளைகள் உணவாகப் பயன்படும். சுளைகளில் 75 விழுக்காடு சருக்கரை உள்ளது. இதன் பிஞ்சுகளைக் கறி சமைப்பார்கள்.இதன் அடிமரம் வலியது. அழகான மஞ்சளும் இளஞ்செம்மையும் கலந்த நிறமானது. இதன் பலகை பலவாறு பயன்படுகின்றது.

அர்ட்டோகார்ப்பஸ் என்ற இதன் பேரினப்பெயர் கிரேக்க மொழியில் ‘ரொட்டிக்கனி’ (Bread fruit) என்று பொருள்படும் சொல்லிலிருந்து உண்டாயிற்று என்பர். ‘ஜாக்’ என்ற ஆங்கிலப் பெயர் ‘சக்கா’, ‘ஜக்கா’ என்ற மலையாளச் சொல்லிலிருந்து உண்டாயிற்றாம்.

பலாமரம் இந்தியாவில் பலவிடங்களில் இதன் பழத்திற்காகப் பயிரிடப்படுகிறது. பலாப்பழத்திலிருந்து சுவையான ‘குடிநீர்’