இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
650
சங்க இலக்கியத்
தாவரக் குடும்பம் | : | மோரேசி |
தாவரப் பேரினப் பெயர் | : | அர்ட்டோகார்ப்பஸ் |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டெகிரிபோலியா |
சங்க இலக்கியப் பெயர் | : | பலா, பலவு |
ஆங்கிலப் பெயர் | : | ஜாக் மரம் (Jack Tree) |
தாவர இயல்பு | : | நன்கு தழைத்துக் கிளைத்து வளரும் மரம். 4000 அடி உயரம் வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நன்கு வளர்கிறது. பலவிடங்களிலும் வளர்க்கப்படுகிறது. |
இலை | : | அகன்ற, பளப்ளப்பான, தடித்த, தனியிலைகள் சுற்றடுக்கில் உண்டாகும். |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் பெண் பூக்களைக் கொண்ட ‘கோளி’ என்ற சிறு விரல் போன்ற கதிர் உண்டாகும். இதற்கு ரிசப்டகிள் என்று பெயர். |
மலர் | : | பெண் பூக்களும், ஆண் பூக்களும் தனித் தனியே உண்டாகும். ஆண் பூக்களைக் காணுதல் அரிது. ஆண் பூக்களில், 4 பிளவுள்ள பூவுறையும், ஒரு மகரந்தத் தாளும் இருக்கும். பெண் பூக்களில், பூவுறை (கோளி) குழாய் வடிவில் கதிரின் அடியில் ஒட்டியிருக்கும். |
சூலகம் | : | சூற்பை நேரானது. தொங்கு சூல். சூல் தண்டு நீண்டு, வெளியில் தோன்றும். சூல்முடி பிளவில்லாதது. |
கனி | : | பலாப் பிஞ்சு நீள் உருண்டை வடிவானது. ‘பலா முசு’ எனப்படும். ‘கோளி’ எனப்படும் இப்பிஞ்சு, மகரந்தச் சேர்க்கையின் பிறகு, பருத்து வளர்ந்து பலாக்காய் ஆகும். காயில் காம்புண்டு. இதில் பால் சுரக்கும். காய் முதிர்ந்து பழமாகும். கனியின் புறவுறை தடித்த, சதைப் பற்றானது. புறத்தில் தடித்த முட்கள் உண்டாகும். |