பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வஞ்சி
சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா (Salix tetrasperma,Roxb.)

பகைவரிடம் போருக்குச் செல்வோர் வஞ்சிப் பூவைச் சூடுவர். ஆகவே, இது ஒரு போர் மலர். இதனைச் சங்கப் பாடல்கள் மரம் எனக் குறிப்பிடுகின்றன. ‘வஞ்சி’ என்பது ஒரு கொடி என்போரெல்லாம் பிரம்பின் கொடியைக் குறிப்பிடுகின்றனர். வஞ்சிக் கோட்டில் நாரை தன் துணையொடு உறங்குமென்று கூறும் புறநானூறு. லஷிங்டன் என்பாரும், காம்பிள் என்பாரும் வஞ்சி என்பதற்குச் சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா என்ற தாவரப் பெயரைக் கூறுகின்றனர். ஆகவே இது ஒரு சிறு மரம்.

சங்க இலக்கியப் பெயர் : வஞ்சி
தாவரப் பெயர் : சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா
(Salix tetrasperma,Roxb.)

வஞ்சி இலக்கியம்

‘வட்கார்மேல் செல்வது வஞ்சி’ என்றபடி, போருக்கு எழுவார் வஞ்சிப் பூவைச் சூடிச் செல்வர். ஆதலின். இது ஒரு போர் மலர் ஆகும். ‘வஞ்சி’ என்பது பற்றிப் புலவர்கள் கூறுவன:

“மென்பாலான் உடன் அணைஇ
 வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை”
-புறநா. 384 : 1-2

“வஞ்சி ஓங்கிய யாணர் ஊர” -ஐங். 50 : 2

இவற்றைக் கொண்டு பார்க்குமிடத்து வஞ்சி என்பது ஒரு மரமென்றும், இதன் கிளையில் நாரை தன் பெடையோடு துயில் கொள்ளும் என்றும் அறியலாம்.

பகைவர் மேல் படையெடுத்துப் போருக்குப் போம்போது சூடுவதும், ‘புதலும், மங்கையும், ஓர்பதியும், மாற்றார் குடையும்