இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
654
சங்க இலக்கியத்
வஞ்சி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | ஆர்டினேஸ் அனாமலி (எந்தத் தாவரக் குடும்பத்திற்கும் தொடர்பில்லாதது) |
தாவரத் துணைக் குடும்பம் | : | சாலிசினே (Salicineae) |
தாவரப் பேரினப் பெயர் | : | சாலிக்ஸ் (Salix) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | டெட்ராஸ்பர்மா (tetrasperma) |
ஆங்கிலப் பெயர் | : | இந்திய ‘வில்லோ’ (Indian willo) |
தாவர இயல்பு | : | பெரும் புதர் அல்லது சிறு மரம்; 8000 அடி உயரம் வரையில் ஆற்றோரத்தில் வளரும. |
சங்க இலக்கியப் பெயர் | : | வஞ்சி |
இலை | : | நீளமானது; நுனி குத்து வாள் போன்று கூரியதாக இருக்கும். இலையடி அகன்று உருண்டிருக்கும்; 2-6 அங்குல நீளமும், .4-2.25 அங்குல அகலமும் உடையது. இலை வரம்பு வாள் போன்ற பற்களை உடையது. இலைக் காம்பு, 1 அங்குல நீளமானது. |
மஞ்சரி | : | காம்பற்ற மலர்கள் நிறைந்த கொத்தாக இருக்கும். |
மலர் | : | பால் வேறுபட்டது; பளபளப்பானது; மெல்லியது; இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்திருக்கும். |
அல்லி, புல்லி வட்டங்கள் | : | இல்லை. |
மகரந்த வட்டம் | : | ஆண்மலரில் இரண்டு தாதிழைகளே உள்ளன. |
சூலக வட்டம் | : | பெண்மலரில் 1 செல் உள்ள சூலகம். பல 4-8 சூல்கள் உள. |