பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

மஞ்சள்
குர்குமா லாங்கா (Curcuma longa,Linn.)

மஞ்சள் குத்தாக வளரும் ஓராண்டுச் செடி. இதன் கிழங்கு மஞ்சள் ஆகும். இது நிறத்தால் பெயர் பெற்ற மங்கலப் பொருள். மஞ்சள், சங்க காலந்தொட்டுத் தமிழ் நாட்டில் பயிரிடப்பட்டு வருகின்றது. உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும். மருந்தாகவும் பயன்படும்.

சங்க இலக்கியப் பெயர் : மஞ்சள்
தாவரப் பெயர் : குர்குமா லாங்கா
(Curcuma longa,Linn.)

மஞ்சள் இலக்கியம்

சோழ வளநாட்டின் கழனியில் மஞ்சள் விளைவதைப் பட்டினப்பாலை கூறுகின்றது.

“காய்க்கமுகின் கமழ் மஞ்சள்” -பட்டின. 17

மதுரைக்காஞ்சி மஞ்சள், இஞ்சி, மிளகு முதலியன கல்தரையினிடத்தே குவிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகின்றது.

“இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
 பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி”
-மதுரைக். 289-290

மஞ்சள் குத்துக்குத்தாக வளரும் ஓராண்டுச் செடி; மண்ணில் தரை மட்டக் கிழங்காக வளரும். இதுவே மஞ்சளின் தண்டு ஆகும். இதில் கணுக்கள் காணப்படும். கணுவில் கிளைத்த மஞ்சள் கிழங்கு இருக்கும். இதன் நுனியில் குருத்து மோனோக்கி எழுந்து நிலத்திற்கு மேற்பரப்பில் இலை விட்டு வளரும். இதன் இலைகள் நீளமானவை; அகன்றவை. பசுமையானவை. மெல்லியவை, ஏறத்தாழ 4-5 அடி உயரமானவை. மஞ்சளின் மெல்லிய