இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
667
வாழை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | சைடாமினே |
தாவரக் குடும்பம் | : | மூசேசி (Musaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | மூசா (Musa) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பாரடைசியாக்கா சாப்பியென்டம் (paradisiaca var. sapientum) |
ஆங்கிலப் பெயர் | : | பனானா (Banana) |
தாவர இயல்பு | : | நேராக வளரும் செடி. 5-10 அடி உயரம். |
சங்க இலக்கியப் பெயர் | : | வாழை |
உலக வழக்குப் பெயர் | : | வாழை |
இலை | : | மீக நீளமான, அகன்ற தனியிலை. இளம் இலை குருத்தெனப்படும். இதில் நடு நரம்பின் ஒரு புறத்து அகலிலை உட்புறமாகச் சுருண்டும், அதன் மேலே மறு புறத்து இலைப் பகுதி சுருண்டு, சுற்றியும் இருக்கும். 6-8 அடி நீளமும், 1-2 அடி அகலமும் உளளது. |
மஞ்சரி | : | குலை, தார் எனப்படும். இதில் மலர்கள் காம்பின்றி, மலர்த் தண்டில் ஒட்டி வளரும்; குலையில் இணர்த் தண்டில், மலர்கள் சீப்புச் சீப்பாகவும், ஒவ்வொரு சீப்பையும் ஒரு மடல் மூடியும் இருக்கும். மடல்கள் சுற்றொட்டு முறையில் உண்டாகும். |
மலர் | : | வாழைக் குலையில் ஆண் பூக்ககள் நுனியிலும், பெண் பூக்கள் அடியிலும் உண்டாகும். |
அல்லி, புல்லி வட்டங்கள் | : | 2 அல்லியும், புல்லியும் இணைந்தவை. மேற்புறத்தில் 3-5 பிளவாகவும், |