பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

668

சங்க இலக்கியத்

அடியில் குழல் வடிவாகவும் இருக்கும். மற்றொரு அகவிதழ் தனியாகப் பிரிந்து நீண்டு வளர்ந்திருக்கும்.
மகரந்த வட்டம் : பொதுவாக, 5 நேரான தாதிழைகளே இருக்கும். மற்றொன்று குறைபட்டிருக்கும். தாதுப்பைகள் நேரானவை.
சூலக வட்டம் : சூலகம் ஏனைய மலர்ப் பகுதிகட்கு அடியில் இருக்கும். பல சூல்களைக் கொண்டது. சூல்முடி 3-6 பிளவானது.
கனி : சதைக்கனி. இனிமையானது. பூவும், காயும், பழமும் உணவுப் பொருள்கள்.
விதை : கனியில் உருண்டையான விதைகள் உண்டாகும். இவ்விதைகள் முளைத்து வளர்ந்து, செடியாகும் தன்மையை இழந்து விட்டன.

வாழை மரத்தை ‘மானோகார்ப்பிக்’, அதாவது ஒரு தரம் காய்க்கும் தாவரம் என்பர். வாழை மரத்தடியில் கிழங்கிருக்கும். இதுவே வாழையின் அடிமட்டத் தண்டாகும். இதிலிருந்து முளைகள் வெளிப்பட்டு, வாழைக் கன்றுகள் வளரும்.

வாழை தொன்று தொட்டு உலகமெல்லாம் வளர்க்கப்பட்டு வரும் பயன்படும் தாவரம். இந்தியாவில் மாமரத்திற்கு அடுத்து வாழையே அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்படுகின்றதென்பர்.

உலகிலேயே மிக இனிமையான பொருள் வாழைப்பழமென்றார் டிஸ்ரெயிலி. வாழை முதல் முதலில் எங்கு உண்டாயிற்று என்பதைத் திட்ட வட்டமாகச் சொல்ல இயலவில்லை. இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றதென்றும், எகிப்து நாட்டில் கி. மு. 1000 ஆண்டுகட்கு முன்னரே அருமையாக வளர்க்கப்பட்டதென்றும் ஹேயீஸ் கூறுகின்றார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும், இதன் கனிக்காகப் பல நூறு வேறு வகையான வாழைகள் வளர்க்கப்படுகின்றன,

வாழையின் மூசா டெக்ஸ்டிலிஸ் (Musa textilis) என்ற ஒரு சிற்றினம், அதன் நாருக்காகப் பிலிப்பைன்ஸ் நாட்டில் வளர்க்கப்டுகிறது. நார்ப்பட்டு என்று கூறப்படும் பட்டிழைகள் இதன்