பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

675

முகைகள் போலக் குவிந்து, சிறிது உள் மடிந்து வளைந்திருத்தலின், உவமை நலம் மிகச் சிறந்து விளங்குகின்றது. ‘தோகை மாட்சிய’ என்றவதனால், ‘மெல்ல இயலும் மயிலுமன்று’ (கலி. 55) என்பது போல, தலைவன் தன்னை அறிந்து கொள்ளாதபடி, மெல்லென அசைந்து வந்தாள் என்பது புலனாகும். ‘இன்துணையாகிய மடந்தை’ என்ற அதனால், ‘உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு’ (குறள். 1122) என்றதற்கேற்பத் தலைமகள், அவனது நெஞ்சமர்ந்து இருத்தலைக் காதற் சிறப்புரைக்கும் முகத்தால் வெளிப்படக் கூறியதோடன்றித் தனது உடலை ஒன்றிய உயிர் போலவும் உள்ளாள் எனக் கருதியவாறுமாம். இனி,

“இம்மை மாறி மறுமை யாயினும்
 நீயாகியர் எம் கணவனை
 யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே ”
-குறுந். 49 : 3-5

எனத் தலைமகள் உளமாரக் கூறுதலுண்மையின் தம்மை விழையும் மகளிருடைய உள்ளக் கிடக்கை இங்ஙனம் என்றுணர்ந்த தலைமகன், ‘என்நெஞ்சு அமர்ந்தோர் நீயலது உளரோ’ எனக் கூறினான் என்பதும் ஒன்று.

காந்தள் முகை வாய் அவிழ்ந்து அரும்புங்கால், முகையின் சிவந்த உட்புறம் சிறிது வெளிப்படும். அது தீக்கடைக்கோல் போலத் தோன்றும். இதனை,

“களிபட்டான் நிலையேபோல் தடவுபு துடுப்புஈன்று
 ஞெலிபுஉடன் நிரைத்த ஞெகிழ்இதழ்க் கோடலும்

(ஞெலிபு-தீக்கடைக்கோல்) -கவி. 101 : 3-4

என மிக அழகாகக் கூறுவர். மேலும்,

“தொன்றுஉறை துப்பொடு முரண்மிகச் சினை இக்
 கொன்ற யானைக் கோடு கண்டன்ன
 செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்”
ーநற். 294 : 5ー7
“மறம்மிகு வேழம்தன் மாறுகொள் மைந்தினான்
 புகர்நுதல் புண்செய்த புய்கோடு போல
 உயர்முகை நறுங்காந்தள் நாள்தோறும் புதிதுஈன ”
-கலி. 53 : 3-5

என்பனவற்றுள் இரண்டு யானைகள் ஒன்றொடொன்று போரிடும் செய்தி கூறப்படுகின்றது. அங்ஙனம் ஒரு யானையைக் குத்திய