பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கோடல்
குளோரியோசா சுபர்பா (Gloriosa superba, Linn.)

கோடல் இலக்கியம்

சங்க இலக்கியங்களில் காந்தள் மலருக்குக் கோடல், தோன்றி என்ற வேறு பெயர்களும் குறிப்பிடப் படுகின்றன. நல்லந்துவனாரும் (பரி. 11 : 20-21) கேசவனாரும் (பரி. 13-16) நப்பண்ணனாரும் (பரி. 19 : 76-78), காந்தளையும் தோன்றியையும் வேறு வேறு மலர்களாகக் கூறியுள்ளனர். நப்பூதனாரும் (முல்லைப். 95-96) கல்லாடனாரும்[1] தோன்றியையும் கோடலையும் வெவ்வேறு மலர்களாகக் கூறியுள்ளனர்.

குறிஞ்சிப்பாட்டினுள் கபிலர் ‘ஒண்செங்காந்தள்’ (62) எனவும், ‘கோடல் (கைதை)’ (83) எனவும், ‘சுடர்ப்பூந்தோன்றி’ (90) எனவும் தனித் தனியாகப் பிரித்தே பாடுகின்றார். எனினும் ஒண்செங்காந்தள் என்ற அச்சொற்றொடருக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘ஒள்ளிய சிவந்த கோடற்பூ’ என்று உரை கூறியுள்ளார். அவர் தாமெழுதிய உரைகளில் எல்லாம் காந்தள் என்பதற்குக் காந்தட்பூ என்றும் (கலி. 45), செங்காந்தள் என்பதற்குக் ‘கோடற்பூ’ என்றும் (குறிஞ். 62). கோடல் என்பதற்குச் ‘செங்காந்தள்’ என்றும் (கலி. 101) ‘கோடற் பூ’ என்றும் (கலி. 103), ‘வெண்கோடற்பூ’ என்றும் (குறிஞ். 83), தோன்றி என்பதற்குத் ‘தோன்றிப்பூ[2]’ என்றும் (முல்லைப். 96) சுடர்ப்பூந்தோன்றி என்பதற்குச் ‘செங்காந்தள்பூ’ (குறிஞ். 90) என்றும் உரை வகுத்துள்ளார். ஆகவே காந்தள், கோடல், தோன்றி என்பன வெவ்வேறான மூவகை மலர்கள் என்பது புலனாகும். கோடல் என்பது பெரும்பாலும் வெண்கோடலையே சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. வெண்மை அடைமொழியுடன் குறிக்கப்படும் இக்கோடல் செம்மை அடைமொழியோடு சொல்லப் படவில்லை. எனவே கோடல், கோடை என்னும் பெயர்கள் வெண்கோடலுக்கே உரியவை. ஒண்செங்காந்தள் (குறிஞ். 62) என்பதற்கு ஒள்ளிய சிவந்த கோடற்பூ என்று கூறிய நச்சினார்க்கினியர் அங்குச் செங்காந்தளைக் கூற முனைந்து, காந்தளுக்குக்


  1. கல்லா. 20
  2. சீவக. சிந். 73 : 1563