பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

693

பாம்பாய்ப் போதாகி, விரலாய் இதழ் அவிழ்ந்து, வெண்குடையாய் மலர் பரப்பி, வளைமுறியாய் இதழ் உகுந்து, மாரிக்காலத்தில் தண்ணிய மலைப்பாங்கில் காணப்படுவதென்பதைச் சங்கச் சான்றோர் கூற்றால் அறியலாம். ஆயினும், காந்தளும், கோடலும் ஒன்றுதானா; அல்லது வேறுபட்டவையா என்ற ஐயம் உளது.

காந்தள் மலர்ந்து, சில நாள்களுக்குப் பின்னர், இதன் இதழ்கள் செந்நிறம் மாறி வெளுத்துப் போகும். இந்நிலையில் இச்செங்காந்தள் வெண்கோடலாகக் காட்சி தந்ததா என்ற எண்ணம் எழுகிறது. ஆகவே இப்போதைக்கு இதனை மலர்ந்து, முதிர்ந்த காந்தளாகவே கருதவும் இடமுண்டு.

மேலும், தாவரவியலில் காந்தளை ஒத்த வெண்ணிற மலர் ‘குளோரியோசா’ என்னும் பேரினத்தில் காணப்படவில்லை.