பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கண்பு–சம்பு–சண்பு
டைபா அங்கஸ்டடா (Typha angustata,Bory & Chaur.)

‘கண்பு’ என்பது பல்லாண்டு வளர்ந்து வாழும் சதுப்பு நிலச் செடி. இது ‘சம்பு’ என்று இந்நாளில் வழங்கப்படும். இதற்குச் ‘சண்பு’ என்ற பாடபேதமும் உண்டு. இதன் ‘இணர்’, கம்பின் கதிர் போன்றது.

சங்க இலக்கியப் பெயர் : கண்பு
தாவரப் பெயர் : டைபா அங்கஸ்டடா
(Typha angustata,Bory & Chaur.)

கண்பு–சம்பு–சண்பு இலக்கியம்

பெரும்பாணாற்றுப்படையில் சிறுபிள்ளைகள் கண்பினது புல்லிய காயாகிய கதிரை முறித்து அக்காயில் தோன்றிய தாதை மார்பிலே அடித்துக் கொண்டு விளையாடுவர் என்று கூறுகின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

“பொன்காண் கட்டளை கடுப்ப கண்பின்
 புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்”
-பெரும்பா. 220-221


இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர் ‘பொன்னை உரைத்து மாற்றுக்காணும் உரை கல்லை ஒப்பக் கண்பினது புல்லிய காயில் தோன்றிய தாதை, அக்கதிரை முறித்து அடித்துக் கொண்ட மார்பினை உடைய சிறுபிள்ளைகள்’ என்று உரை கூறுகின்றார். இவ்வுரையைக் கொண்டு விளக்கம் ஏதும் அறியப்படாமையின் எமது இனிய ஆசிரியர் தவத்திரு கந்தசாமியார் அவர்களிடம் அணுகி வினவினோம். பல நாள் கழித்து ஓர் நாள் அவர் எம்மை அண்ணாமலை நகரில் வடபாலிருக்கும் ஒரு சதுப்பு நிலக் குட்டை