பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சங்க இலக்கியத்

தாமரைக்குக் கமலம் என்றதொரு சங்கத் தமிழ்ப் பெயரும் உண்டு.

“மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய”-பரிபா. 2 : 14

கமலம் என்ற இச்சொல் ஈண்டு பேரெண்ணைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

“ஐ,அம்பல் என வரூஉம் இறுதி
அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்”

-தொல். எழுத்து: 8:98
என்னும் தொல்காப்பிய நூற்பாவினால் ‘ஐ’ என்னும் எழுத்தை இறுதியாகக் கொண்ட ‘தாமரை’ அல்லது ‘அம்’ என்பதை இறுதியாகக் கொண்ட ‘கமலம்’ என்னும் பெயர் எனத் துணியலாம்.

நூறு நூறாயிரம் என்பது ஒரு கோடி ஆண்டுகள். அதாவது:

100 x 100000 = 107=கோடி 10000000
கோடி எண் மடங்கு கொண்டது 1056 -சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது 10448 -விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது 103584 -ஆம்பல்
ஆம்பல் எண் மடங்கு கொண்டது 1028672 -கமலம் அல்லது தாமரை
கமலம் எண் மடங்கு கொண்டது 10229376 -குவளை
குவளை எண் மடங்கு கொண்டது 101835008 -நெய்தல்
நெய்தல் எண் மடங்கு கொண்டது 1014680064 -வெள்ளம்

(இராமனது சேனை 70 வெள்ளமென்றும் இராவணனது சேனை 1000 வெள்ளமென்றும் கம்பர் கூறுவர்.)

இம்முறை வைப்பினைப் பிங்கலத்திலும் பரிபாடலிலும் ஈழ முனிவன் தன் யாழ் நூலிலும் கண்டு கொள்க. ஆகவே, தாமரை என்பது 1028672 என்று ஆகும். அதாவது 10 என்ற எண்ணை 28672 தடவை பெருக்கினால் வரும் எண்ணாகும். இங்ஙனமாகப் பெருகும் ‘கமல’மும் ‘வெள்ள’மும் நுதலிய ஆண்டுகளான பல்லூழிக் காலந்தொட்டு நிலைத்துள்ள “ஆழிமுதல்வ! நின்னை யாவரும் உணரார்! நிற்பேணுதும்"! என்கிறார் கீரந்தையார்

‘தாமரை பயந்த ஊழி’ (திருமு. 164) என ஊழிக்காலப் பேரெண்ணைக் குறிப்பது போலவே, மிகச் சிறு பொழுதிற்கும் தாமரை கொள்ளப்பட்டது. ‘கணம்’ என்னும் சொல் மிகச் சிறு