பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

732

மஞ்சரி : 10 அங்குல நீளமும், 0.5-1.5 அங்குல, அகலமுமான பூந்துணர். மங்கிய வெண்ணிறம்.
மலர் : பெருமூங்கிலைப் பெரிதும் ஒத்தது.
விதை : பெருமூங்கிலரிசியைப் போல, இதிலும் மூங்கிலரிசி உண்டாகும்; இதனை மலைவாழ் மக்கள் உணவாகக் கொள்வர் .

இதன் கோல்கள், கம்புகளாகவும், கூரை வீடு கட்டுதற்கும், தடியடிப் பணிக்குக் காவலர்களுக்குக் கொடுக்கப்படும் ‘லத்தி’ என்ற கைக் கம்புகளாகவும் பயன்படும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 70 என பார்த்தசாரதி (1946a) என்பாரும், 2n = 72 என, டிஷ்லர் (1927) ரிக்காரியா, கோட்வால்(1940b) என்போரும் கணக்கிட்டுள்ளனர்