பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

740

சங்க இலக்கியத்

கரும்பிற்கு அடைமொழியாக்கி, ‘கரும்பை விண்ணுலகத்தினின்று இவ்வுலகத்தின் கண் கொடு வந்து தந்தும்’ என்று உரை வகுத்து விட்டார். இப்பாடலை நன்குணர்ந்து பயிலாத விரிவிலா அறிவினர், இந்நாளில், ‘கரும்பு தமிழ் நாட்டினதன்று’ என்று பிழைபட எழுதி வருகின்றனர்.

கரும்பு தொன்று தொட்டு தமிழ் நாட்டில் பயிரிடப்படுவது. இது முதல் முதலாகத் தென் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கக் கூடும் என்றும், மிகப் பழைய காலந்தொட்டுக் கரும்பு தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வந்தது என்றும் தாவரவியல் அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளனர். இவ்வுண்மை, கோவையிலுள்ள மத்திய அரசின் கரும்பாய்வு மையத்தில் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் ஆய்வின் விளைவாகும். இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கெல்லாம், பயிரிடுதற்குச் சீர்சால் கரும்புக் கணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், எமதினிய பேராசிரியர் முனைவர் டி. எஸ். இராகவன் அவர்கள் இலண்டன் மாநகரத்துப் பல்கலைக்கழகத்தில், தமது பேராசிரியர் ரகல்ஸ் கேட்ஸ் அவர்களுடனும், சானகி அம்மையார், டார்லிங்ட ன் முதலிய தாவரப் பேராசிரியர்களுடனும் கரும்பில் ‘செல்லியல்’ ஆய்வுகள் மேற்கொண்டனர். இவர்கள் ‘செல்லியல்’ மரபில், எவ்வளவுக்கெவ்வளவு (பேசிக் = Basic) அடிப்படைக்குக் குரோமோசோம் எண்ணிக்கை ஒரு தாவரத்தில் குறைவாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அத்தாவரம் தொன்மையுடையது என்ற மிக நுண்ணிய கோட்பாட்டை உருவாக்கியுள்ளனர். கரும்பில் இந்த எண்ணிக்கை மூன்றேயாகலின், இது மிகத் தொன்மையுடைத்தென்று கண்டனர். இக்கோட்பாடு மேலை நாட்டிலிருந்து வெளியிடப்படும் ‘ஜெனிடிக்ஸ்’ என்ற சஞ்சிகையில், 1950 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. மேலும், இக்காலத்தில் எழுதப் பெற்றுள்ள செல்லியல் நூல்களில் எல்லாம் இக்கோட்பாடு கூறப்படும்.

இங்ஙனமே குன்றிமணியில் யாம் 1952 ஆம் ஆண்டில் ஆய்வு செய்து, இதில் அடிப்படைக் குரோமோசோம் எண்ணிக்கை ஆறெனவும், ‘குன்றி’ தமிழ் நாட்டுக் கொடி எனவும், இது இற்றைக்கு, ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகட்கு முந்தியதாக இருக்கலாம் எனவும் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்விதழில் (Jour. An. univ: vol: XXII) (1961) வெளியிட்டு உள்ளோம். இதன் விரிவைக் ‘குன்றி’ என்னும் தலைப்பில் காணலாம். தாவர அறிவியல் சிறிதும் இல்லாத இந்நாளைய