பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

743

ஈண்டு பயன்படாப் பொது மகளிரையும், மகப்பயந்து பயன்படும் குலமகளையும் ஒப்ப நினைக்கும் ஊரனுடைய மார்பு அங்ஙனம் கரும்பையும், நெல்லையும் விளைவிக்கும் பழனமாகற்க என்று யாம் வேட்டோம்’ என்கிறாள் என்பதாம்.

கரும்பு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : சக்காராம் (Saccharum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆபிசினேரம் (officinarum)
சங்க இலக்கியப் பெயர் : கரும்பு
பிற்கால இலக்கியப் பெயர்கள் : வேழம், கன்னல், கழை, கரும்பு
உலக வழக்குப் பெயர் : கரும்பு
தாவர இயல்பு : நீண்டு, உயர்ந்து 5-20 அடி வரை வளரும். கணுக்களை உடைய புல்.
தண்டு : மண்ணுக்கு அடியில் இதன் தடித்த வேர்பகுதி இருக்கும். இதிலிருந்து ‘கல்ம்’ (culm) எனப்படும் இதன் தண்டாகிய கரும்பு வளரும்.
இலை : செங்குத்தானது. 5 அடி வரை மிக நீளமானது. சற்று 2" அகன்றது. விளிம்பு சற்று உட்புறம் வளைந்து இருக்கும். பசுமையானது. சொரசொரப்பானது. இலை தோன்றும் கணுவில் மெல்லிய ‘விக்யூல்’ தண்டை மூடியிருக்கும். கணுக் குருத்து வளராது