பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

61

புல்லி வட்டம் : 4-5 புறவிதழ்கள் பசிய நிறமுள்ளவை. அகன்று நீண்டவை. இவை தாமரை மொட்டை மூடிக் கொண்டிருக்கும்.
அல்லி வட்டம் : பல அகவிதழ்கள் (20-25). நீண்ட அகன்ற மெல்லிய அழகிய இதழ்கள்.
மகரந்த வட்டம் : பல மகரந்தத் தாள்கள் மகரந்தப் பைகளைத் தாங்கி நிற்கும். இப்பைகளை இணைக்கும் மகரந்தத் தாள்; பைகளுக்கும் மேலும் நீண்டிருக்கும். பைகளில் தாது மிகுத்து உண்டாகும். வண்டினம் இத்தாதுக்களைத் தேடி வந்து நுகரும்.
சூலக வட்டம் : பொகுட்டு எனப்படுவது சற்று அகன்ற நீண்ட (3-4 அங்குலம்) ‘டோரஸ்’ எனப்படும் மலரின் நடுவில் இருக்கும். இதனுள் முட்டைவடிவான சூலகங்கள் அமைந்துள்ளன.
சூல் தண்டு : குட்டையானது.
சூல் : 1-2 சூல்கள் சூலக அறையில் காணப்படும்.
விதை : கடலை விதை போன்றது. சூலகத்தை நிறைத்துக் கொண்டு வளரும் விதையின் புறவுறை பஞ்சு போன்றது. இதனுள் சதைப்பற்றான இரு வித்திலைகள் காணப்படும். முளைக் குருத்து மடிந்திருக்கும்.

தாமரை, மலருக்காகக் குளங்களில் வளர்க்கப்படுகிறது. மணிவாசகர் சிவபெருமானது திருஉருவத்தைச் “செந்தாமரைக் காடனைய மேனி” என்றார்.[1]


  1. திருவாசகம் : திருச்சதகம் : 26