பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

760

சங்க இலக்கியத்

வரகு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : பாஸ்பாலம் (Paspalum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்குரோபிகுலேட்டம் (scrobiculatum)
சங்க இலக்கியப் பெயர் : வரகு
தாவர இயல்பு : ஓராண்டுச் செடி. கிளைத்து வளரும்; ‘கல்ம்’ என்ற தண்டுப்பகுதி 3 அடி வரை ஓங்கி வளரும்.
இலை : குறுகிய, நீண்ட இலை 18 அங்குல நீளமும், 1- 4 அங்குல அகலமும் உள்ளது. பளப்பளப்பானது. இலை விளிம்புகள் உள்வளைவாக இருக்கும்.
மஞ்சரி : தண்டின் நுனியில் கதிராக நுனி வளர் பூந்துணராக உண்டாகும். இணர்த் தண்டு தட்டையானது. கதிர்கள் இரண்டாகக் கிளைத்திருக்கும். ‘ஸ்பெக்லெட்’ என்னும் இது 0.09 அங்குல நீளமுள்ளது.
மலர் : இரு பாலான இதன் மலர் ‘குளும்’ என்ற உமிக்குள் உண்டாகும். மேற்புற ‘லெம்னாவும்’ ‘பாலியா’ செதில்களும் சொரசொரப்பானவை. 2 ‘லாடிக்கியூல்ஸ்’ இருக்கும்.
மகரந்த வட்டம் : 3 தாதிழைகள் தனித்திருக்கும்.
சூலக வட்டம் : லெம்னா, பாலியா ஆகிய செதில்களுக்குள், இருபக்க விரிவான வரகு அரிசி உண்டாகும். இதனைப் பல உமிகள் மூடியிருக்கும்.

வரகு இதன் அரிசிக்காகப்_பயிரிடப்பட்டு வருகிறது. வரகு அரிசி நல்ல சத்துள்ள உணவுப் பொருள். இதனை அரிசி ஆக்குதற்கு நன்கு குத்தி, மேல் உறைகளாகிய உமிகளைப் போக்க வேண்டும். இல்லாவிடில், இது ஒரு மயக்கந்தரும் நச்சுப் பொருளாகி விடும். இது 7000 அடி உயரமுள்ள மலைகளிலும் வளரும் இயல்புடையது. இதன் தழை வைக்கோலாகி, மாடுகளுக்கு உணவாகும். இதனைக் கூரை வேய்வதற்கும் பயன்படுத்துவர்.