பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

 துறைத் தலைவர் முதலியோர்க்கும், இப்படங்களை அழகாக உருப் பெருக்கித் தந்த இப்பல்கலைக்கழகக் கணிப்பொறி மையத்தாருக்கும் எமது நன்றி உரியதாகும்.

இந்நூலைப் பிழையின்றி, தட்டச்சு செய்து தந்த தட்டச்சருக்கும், இதனை வரிவரியாக ஒப்பு நோக்கித் தாவர வகைப் பாட்டியலுக்கேற்ப ஒழுங்குபடுத்தியும், கூடிய மட்டில் அச்சுப் பிழையின்றி வெளியாதற்கும் பெருந்துணை புரிந்த முனைவர் செல்வி ச. பரிமளா அவர்கட்கும் எமது நன்றி என்றும் உரியதாகும். இந்நூல் இத்துணைச் சிறப்புடன் வெளிவருதற்குப் பெருந் துணையாயிருந்த தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புத் துறைத் துணை இயக்குநர் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரனார் அவர்கட்கும் அச்சுப் பிழை திருத்தி உதவிய புலவர் திரு வேல். சம்பந்தமூர்த்தி, திரு மா. பாலகிருட்டிணன் எம்.ஏ.,பி.எட்., அவர்கட்கும் நன்றி நவிலுதல் எமது கடப்பாடாகும்.


தஞ்சாவூர் இங்ஙனம்

1–11–86 கு. சீநிவாசன்