பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

வேளை
கைனன்டிராப்சிஸ் பென்டாபில்லா

(Gynandropsis pentaphylla, DC)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘வேளை’ என்னும் சிறு செடி, ஓராண்டுதான் இருக்கும். இதன் பூக்கள் வெள்ளியவை. மாலைப் பொழுதில் பூக்கும். இப்பூ மலர்வதைக் கொண்டு, மழை நாளில் மாலைப் பொழுதை-மாலை வேளையை-அறிய முடியுமாதலின், இது ‘வேளை’ எனப்பட்டது போலும். இச்செடி குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : வேளை
உலக வழக்குப் பெயர் : வேளை, நல்வேளை
தாவரப் பெயர் : கைனன்டிராப்சிஸ் பென்டாபில்லா
(Gynandropsis pentaphylla. DC)


வேளை இலக்கியம்

நாட்டுப் புறத்தில் தெருக்கள் கூடுமிடத்திலுள்ள எருக் குப்பை மேட்டில் வேளைச்செடி தழைத்து வளரும். அதன் போதுகள் கொத்தாகவும் மலர்கள் வெண்மையாகவும் பூக்கும். ஆயர் மகள் இதன் பூக்களைக் கொய்து தயிரில் இட்டுப் பிசைந்து ‘புளி மிதவை’ எனப்படும் ‘புளிக்கூழ்’ ஆக்குவாள் என்பது புற நானூற்றுப் பாட்டு. இதனை:

“ தாதுஎரு மறுகின் போதொடு பொதுளிய
 வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
 ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
-புறநா. 215:2-4

வேளைக் கீரை மிகவும் வறிய மக்களுக்கு உணவாகப் பயன்படுகிறது என்பதை நல்லூர் நத்தத்தனார் சித்திரிக்கிறார். கிணை என்ற பறையடிப்பவனின் மகள், ஒடுங்கிய நுண்ணிய மருங்குலாள். பசியுழந்து தளர்ந்தாள். குப்பை மேட்டில் தழைத்து வளர்ந்துள்ள