பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

77

பூவை (கருங்குவளை) ஒத்திருந்த அவள் கண், அந்நறவை ஆர்ந்த பொழுது கண்டார்க்கு மிக்க மகிழ் செய்யும் பெரிய நறவம் பூவை ஒத்தன என்கிறார் மையோடக்கோவனார்:

“விரும்பிய ஈரணி மெய்ஈரம் தீர
 சுரும்பு ஆர்க்கும் சூர்நறா ஏந்தினாள், கண் நெய்தல்
 பேர்மகிழச் செய்யும் பெருநறாப் பேணியவே
 கூர்நறா ஆர்ந்தவள் கண்”
-பரிபா. 7 : 61-64

நறவின் சேயிதழ் வரிகளை உடையது. இவை மகளிரது கண்ணின் செவ்வரியைக் குறிக்கும். மேலும் சங்கினுடைய முதுகில் அரக்கைத் தீற்றினாற் போன்ற சிவந்த வரி பொருந்திய இதழையுடைய இம்மலரின் நறுமணம் நெடுந்தூரம் வரையில் நுகரப்படும். இதில் நறுந்தாது ஆடிய தும்பி, பொன்னை உரைக்கும் கட்டளைக் கல் போல நல்ல நிறத்தைப் பெறும் என்பார் பேரிசாத்தனார்.

“அவ்வளை வெரிகின் அரக் கீர்த் தன்ன
 செவ்வரி யிதழ்சேண் நாறு நறவின்
 நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
 பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம்”
-நற். 25 : 1-4

நறைக்கொடியில் நார் உரித்தல் உண்டு. இந்த நாரைக் கொண்டு வேங்கை மலர்களைத் தொடுப்பர்.

“நறை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி”

-புறநா. 169 : 15
இதனால் இது குறிஞ்சி நிலப்பூவாதல் கூடும் என்பர் இளஞ்சேரனார்.

ஆகவே, நறவம் ஒரு நறுமணமுள்ள புதர்க்கொடி எனவும், இதில் மலர்கள் கொத்தாகப் பூக்கும் எனவும், மலர் வெளிர் செம்மையானது எனவும், பெரிய செவ்விய இதழ்களை உடையதெனவும், இதழ்கள் செவ்வரிகளை உடையன எனவும், இம்மலரின் நறுமணம் நெடுந்தூரம் பரவும் எனவும், இம்மலரில் தாது மிகுத்து உகும் எனவும், இதில் வண்டுகள் மொய்க்கும் எனவும், இக்கொடியில் நார் இருக்கும் என புலவர் பெருமக்கள் கூறுவது கொண்டு பார்த்தால் இக்கொடியைப் பிக்சா