________________
கண் 68 "கண் (கலி. 60: 5-8). 'பெரிய அமர்த்த மையுண்ட கண்ணையுடைய நின தோழி உறுத்திய பொறுத் தற்கரிய மனககவலையைச் செய்யும வருத்தம கது மென எனது உயிரை வாங்கும் என்று தோழி யிடத்துத் தலைவன கூறிக் குறையிரந்தான (கலி. 60:15-17). இரும்பினால பிளக்கப்பட்ட வடுவின் வகிரை யொத்த தலைவியின் மையுண்ட கண் தலைவன் அருமை செய்து அயர்த்தமையால் மலர்ந்த செலவி குலைந்து முற்றிய அழகினை யுடைய நீலமலரென்று பிறர் கூறும்படியாக வருத்த முற்றுப் பசந்தன (கலி. 64.20-22). எழிலையுடைய மையுண்ட கண்ணையுடையவர் பரததையர் (கலி. 67:6), 'நீ எம்மை நலம் போக நீங்கிய பின அருளா மல கைவிடுதலால் பலநாளும் துயிலாத எம் கண் ஒருநாள் உறக்கத்தைக் கொள்ளவும கூடும்; ஆயி னும், பரத்தையர் பாராட்ட நீ நாடோறும் மணஞ் செய்யும் முழவோசை வந்து அவ்வுறக்கத்தைப் போக்கும். நீ எம்மை நீஙகத் தாம் துயிலைத் துறந்தமையால் அழுது மாறாத மையுண்ட எம் கண் புதலவனைத தீண்டுகையினால் பொருந்து தலும் கூடும், ஆயினும் நினக் கொத்த இளம பரத்தையரைக் கொண்டு வந்து நின் சுற்றமாகிய பரததையர் நின்று பாடும் துணங்கை யாரவாரம் வந்து அவ்வுறககத்தைப் போக்கும்; நீ இங்கே வாராமையின் யாம் துயிலைத் துறந்தமையால் வருந்திய எமக்கு நீர் லிழும் இதழபோலும் நீர் மாறாத கண் பாயலில இமை பொருந்துதலும் கூடும்; ஆயினும், பரத்தையரைக் கொண்டு வரும் நின தேர்க்குதிரையின மணியோசை வந்து அவ் வுறக்கத்தைப் போக்கும்' (கலி. 70:7-18). கணவனி டத்தே துனி மிருதனால பெருக்கு மாறாது வீழ் கின்ற கணணின நீா காமத்தீயினால் வற்றி இடை யிட்டு ஒழுக அவ்வருத்தத்தைக் கணடு அக்கணவன் அளித்தலால் காதலி மகிழந்து நகுதல (கலி. 71:4-6). கணணைக குத்தும்படி ஒளிவிடும் வெள்ளிவள்ளத் தில பெண் கள்ளுண்டல (கலி. 73:3,4). தம் வயத்த ராதற்குரியாரைத தேடிச் சுழல்கின்ற மையுண்ட கண்ணை யுடையவர் பரததையர் (கலி.73.12). அமர்த்த கண்ணையுடைய ஓரை மகளிர் வயலில் நெயதற்பூவோடு ஆம்பற்பூவையும் பறிக்க ஓடும் ஆரவாரததிற்கு அவ்வயலில மீனுண்ணும் பறவைத் திரள் அஞ்சி எழுந்து உயர்ந்த மரக்கிளையில் தஙகி ஒலியெழுப்பும் (கலி. 75:1-8). பூங்கண் மகளிர் (கலி. 78:31). செல்வரியினையும் செருக்கினையும் கொண்ட மழைக் கண்ணின் நீர் மார்பகத்தே வீழக் காதலி தன் காதலனைக் குறித்து முகங் கவிழந்து அழுதாள் (கலி. 77:3,4). 'பூப்போலும் அழகையுடைய நலம் போகும்படியாக என் கண் பொனபோலப் பசந்தனவாயினும, நின் பரத்தை யர் நீ செயயும் கொடுமைகளை என்னிடத்தே வந்து நொந்து கூறாமையை யான் பெறுவேனா யின இயற்கை நலத்தையுமிழந்த அக்கண் துயில் பெறுதலை யான விரும்பேன் எனத் தலைவி பரததைமைத் தலைவனிடம் கூறினாள் (கலி. 77: 12-15).பூங்கண் புதல்வன (கலி:79:20). 'நின்னைப் பெற்ற எம் கண நிறையுமாறு அன்பு மாறாத யான நின் வரவைக் காணும்படி அருளி வட்டப் பலகை சுமப்ப நின்ற கைபுனை வேழத்தைப் பைய இழுத்து வருவாயாக' எனத் தலைவி தன மகனை அழைத்தாள் (கலி. 80:3-9). 'மகளிருடைய செவ் வரியினையும் செருக்கினையுமுடைய மையுண்கண் பசக்கும்படி. அவர்க்கு நோவைக் கொடுக்கும் நின் தந்தையரது பரத்தைமைக் குணமொன்றையும் நீ ஒவ்வாதே' எனத் தலைவனுடைய புதல்வனிடத்தே அவன் வழிமுறைத் தாய் கூறினாள் (கலி.82:20,21). தலைவன் புதல்வன் தெருவிலே விளையாடி மீள் கையில் அவன வேற்றுத்தாயர் நீலததின் முறுக்கு நெகிழ்ந்து வரிசைப்பட்ட பூககள் மிகுகாற்றுக்கு அசைவன்போலே சாளரங்களில் ஒதுங்கிப பார்த்த கண்ணையுடையராய் அவனை நோக்கிப் பின் நெருங்கி வந்து, 'தின் கண்ணால் நீ நின் தந்தைக்குச் செய்யும் சிறப்புக்களைப் போலே எமக்கும் செய்து இவ்விரவு எம்மோடே தங்கிப் போ என்றனர் (கலி. 83:10-20). நண்டின் கண்தன்மை யமைய நெருக்கமாய்ப் பல அருப்புத் தொழில் சூழப்பட்ட சில தொடிகளைப் புதல்வன் கைகளில் அணிந்திருந்தான் (கலி.85:6,7), 'நின் தந்தை வாய்ப் பொய்ச்சூளை மெய்யெனத் தெளிந்து பூப்போலும் அழகையுடைய மையுணட கண் நீர் பரக்க மயங்கும் நோய் மிகுதலால் கண் துயிலாத நின் தாய்மார்க்குரிய பகுதியாய்ச் சிஸ் கவளங் களை உண்பாயாக" எனத தலைவி தன் புதல்வ னுக்கு உணவூட்டினாள் (கலி. 85:26-28). 'நின் அணிகளை நனைத தொழுகும் அழகிய வாயினை எம் கண கலந்து கண்டு களிக்க நீ இங்கே வருவா யாக' எனத் தலைவி தன் மகனை அழைத்தாள் (கலி, 86:4,8,10). நீர் விழுதல் நீங்காத துயிலாத சண் துயில் கொள்ளுமாறு தவைவி தோழியின் சொல்லை நினைத்துத் தலைவனொடு ஊடல் தீர்ந் தாள் (கலி. 87:14-16), 'சேரியிலிருந்த செவ்வரியி னையும் செருக்கையுமுடைய மையுண்ட கண்ணா ரது ஆராத முயக்கத்தால் பாடழிந்துசிதறிய சந்த னத்தையுடைய நின் மேனியைக் கண்டு யான்நின னோடு ஊடுதலைத் தவிர்ந்தேன்; இனி, நீ அப்