உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கண் 72 கண் ஒருவன் உலந்து பிறர்க்குக் காட்டினான் (பரி, 11:123). வையைப் புனலவிளையாட்டில் தலைவி யொருத்தி புலவிகொண்டு அரக்குநீர் நிறைந்த வட் தலைவன் மார்பில் டினை ஊடலுணர்த்தும் எறிய அந்நீர் அவளது அழகிய மையுண்ட கண் ணின வேலேறு போலும் நோக்கம்பட்ட புண்ணில் குருதி சோர்வது போல் வழிந்தது (பரி. 12:66-70). திருமாலின கண தாமரைமலரை ஒக்கும் (பரி. 13:80,51). ஒளிகிளரும் மையுண்ட கண்ணாகிய கெண்டைமீன், கள், புனலாட்டு, புலவி என்னும் இம்மூன்றினாலும் ஒள்ளிய நிறம் சிவக்கப் பரத்தையர் வையையாற்றில் ஆடுவர் (பரி. 16: 39-43). மின்னற்கொடி காண்போரின் கண்ணைக் குத்திச் சுடர்விட்டு நெருங்கி இருளைப் பிளக் கும் (பரி. 18:24,25), பரத்தை தனக்குப் பொருள் கொடுப்பாரை வெளியே போகவிடாமல் தடுத் துத் தன் மடப்பமுடைய மதர்த்த மையுண்ட கண்ணையே கயிறாகக் கொண்டு தோளாகிய தறியிலே கட்டுவள் (பரி. 20:55,86). "முன்னே கெட்டுப்போன எம் எருதினை யாம் தேடித்திரிந்து இவ்விளையாட்டு மகளிர் கண் காண வையைத் தொழுவத்து வணக்குவோம்' என்று தலைவனை எருதாகக் கொண்டு தலைவியின் ஆயத்தார் பரத் தையிடம் கூறினர் (பரி. 28:58-62). காண்போர் கண்ணுக்கு மின்னற்கொடி போல் ஒளிவீசித் திக ழும் பொத்தகட்டின் இடையிடையே இழைத்துச் செய்த தலைக்கோலம் அசையத் திருப்பரங்குன்றத் தில் துடியினது தாள ஓசைக் கேற்ப முறையாகத் தோளையசைப்பவளது கண் பிறழ்தல் அம்பு புடை பெயர் தலை ஒத்தது (பரி. 21:54-56,64,65). பாண்டி யன் ஏந்திய, கண்ணுக்கு ஒளிரும் வேலைப் போல வானம் கடிதாக மின்னி மழை பெய்தது (பரி. 22; 7,8). மைந்தரொடு கயல்மீன் போலும் கண்ணை யுடைய மகளிர் செய்த தவப்பயன் பெரிதென்று கண்டோர் கூற இருபாலாரும் வையைப் புன லாட்டிற்கு வந்து கூடிய போது மகளிரால் வையை அழகு பெற்றதோ, வையை வெள்ளத் தால் அவர் அழகு பெற்றனரோ என்பது தேர்தற்கரிதா யிருந்தது (பரி.22:37-34). பூமுடி நாகர் (ஆதிசேடன) திருக்கோயிலில் அரிபடாந்த மையுண்ட கண்ணையுடைய மகளிரொடு ஆடவரும் கூடி இயற்றும் பாடலும் ஆடலும் தோனறும் (பரி.தி. 1:53,54,59). இருந்தையூரில் வரைவாய் தழுவிய கலசேர் கிடககைக குளவாயமர்ந்தான (ஆதிசேடன) திருக்கோயிலைக் களளுண்டு களித்த அரிபடர்ந்த மலர்போன்ற மையுணட கண்ணை யுடைய மகளிர் தத்தம் காதலரொடு வந்து வணங் குவர் (பரி.தி.1:81-83). 2. இடம். கண்ணகன் - இடமகன்ற - வைப்பு (புறம். 18:24,28; பதி.18:8; பதி. ப. 3:8; நற். 377:2), குண்டு கண் அகழி (புறம்.21:2;37:7; பதி. 48:7;53:8;71:12), கண்ணகன் பறந்தலை (புறம்.35:23;64:3). கண்ண கன் ஞாலம் (புறம். 38:29). அங்கண் விசும்பு (புறம். 56:22; அகம். 208:10). அங்கண் மால்விசும்பு (மது. 384). உழவருடைய சிறுவர் தெங்கம் பழத்தைத் தின்று வெறுத்தால் தந்தையர் தலைகுவிக்காமல் இட்ட குறைக்கண் நெடும்போரில் ஏறித் தாலிப் பனம்பழங்களைப் பறிக்க முயல்வர் (புறம்.61:8-11). வியன்கண் பாசறை (புறம். 62:11), இருங்கண் குழிசி (புறம். 65:2), பாரியின் பறம்புமலை தன அகல நீள உயரத்தால் வான்கண்ணை ஒக்கும் (புறம்.109:9). பரூஉக்கண் மண்டை (புறம். 135:3). அகன்கண் கொல்லை (புறம். 159:16). மலைக்கண் பொடியு மாறு கோடை நீடுதல் (புறம்.114:24,26). கண்ண கன் தாழி (புறம். 228:12). கழைக்கண் நெடுவரை (புறம், 281:4), செம்மண் நிலத்து மடுவின் நீர் நிலையைத் தோண்டியதனால் உண்டாகிய செங் கண் சின்னீரைச் சாடியில் முகந்து முன்றிலில் வைத்திருத்தல் (புறம். 319:1-3), பன்றிகளால் புழுதி யாக்கப்பட்ட விடுநிலத்தில் புதுமழை பெய்து நீங்கப் பள்ளங்களில் தஙகிய சிறிது நீரைக் குரால் உண்டமையின் சேற்றைக் கிளைத்ததனால் கலங்க வாகிய கண்ணில் ஊறிய நீரை அங்கு வாழும் மக்கள் முறையே உண்பர் (புறம்.325:1-6). கடல் கண்டன்ன கண்ணகன் தானை (புறம். 351:4). கர்டு (சுடுகாடு) கண்மறைத்த கல்லென் சுற்றம் (புறம்.368:19).இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம் (புறம். 363:1). கண்ணகன் கிடக்கை (புறம். 369:9). கண்ணகன் பாசறை (புறம்.373:4). யொடு மாறுபட எடுத்த கொடுங்கண் இஞ்சி (பதி. 16:1). நெடுஞ்சேரலாதன் அழித்த பகைவர் நாடு களில் உழுவாரின்றிக் கலப்பைகள் வெறுக்கப்பட்ட தனால் நிலம் கண் வாடிக் கிடந்தது (பதி.19:17). விருந்தினர் கண் மாறிச் செல்லாது உண்ணுமாறு பல்யானைச் செல்கெழுகுட்டுவனது செல்வமனை யில் ஊனுணவு சமைக்கப் பெற்றது (பதி. 21:9-11). அகன் கண் வைப்பு (பதி. 29:10;58:19;66:20;76:15). தெண்கண வறிது கூட்டரியல் (பதி.40:17,18). அமர்க் கண் அமைந்த அவிர்நிணப் பரப்பில கூட்டமாகிய பருந்துகள குருதியை நிரம்ப உண்ணும் (பதி. 67:8,9). அகன்கண் செறு (பதி. 11:1). கண்ணகன் செறு (பெரு.210). கணைகன் பொய்கை (மது. 171; பட். 243). வியன்கண முதுபொழில் (மது.190). அங்கண அகலவயல் (நெடு,21). கச்சினால் நடுவெளியான மலை