________________
கண் 76 கண் புகழ்வதுபோல் பழித்தார் (புறம். 95:1-3), கண்ண கன் கொழுங்குறை (புறம். 364:5). பன்றியின் கொழுத்த கண்ணையுடைய வெள்ளூனை நெய்யில் பொரித்துக் கிணைருதுக்கு விடியனில் ஓய்மான் வில்லியாதன் சோறளிப்பான் (புறம்.379:8-10). நீர் நிறைந்து மெலி தாயுள்ள பனை நுங்கின் கண் வற்றி வலிதாகுமாறு கோடை வருதல் (புறம்.389; 1,3). நெற்சோற்றைப் பசுங்கண் பொரிக்கறியுடன் மாந்துதல் (புறம். 395:36,37), கண்ணகன்ற வலிய தோளினையுடைய வம்பலர் (பெரு. 74,76). வாளரம் கீறியறுத்த கண் நேரிதான வளையல் (மது. 316). பிரிவில் பாண்டிமாதேவி பெரிய மகரக் குழையைக் களைந்தமையால் குறுங்கண் தாளுருவி அழுத்திய சிறிதே தாழ்ந்த காதினையுடையளாக இருந்தாள் (நெடு.137-140). பருத்த கண்ணையுடைய தசை யுணவு (மலை. 252), பலநிறம் பொருந்திய கண்ணை யுடைய பிணையல் (மலை, 349). வெள்ளாட் டினை அரிந்து அதன் தசையோடே சேர்த்துச் சமைத்த கரிய கண்ணையுடைய சோற்றுணவு (மலை. 441). தேனைக் கண்ணிலே உடைய இறால் (மலை. 525). நீர்நிறைந்த நுங்கின் கண் சிதறி விழுந்தவை போல் ஆலியோடு மழை பெய்தது (அகம். 304:1-4). காட்டுநெறியில் கோடைக்காற்று உதிர்த்த குளிந்த கண்ணையுடைய நெல்லிக்காய் பளிங்குக் காசுகளைப் போல வறுநிலத்தில் சிதறிக் கிடக்கும் (அகம்.315:10-13). கருங்கண் கருனைப் பொரியல் (நற்.367:3), பரதவச் சிறுவர் முயன்று தேடிய இனிய கண்ணை யுடைய நுங்கினைப் பெற்று மகிழ்வர் (நற்.392:3-5). பாறை யிடத்தன வாகிய குறுஞ் சுனைகள் நுங்கினது வெட்டப்பட்ட கண்ணையொத்து நீர்நிறைந்திருக்கும் (கலி. 108:40, 41). 6. முலைக்கண். மாற்றார் படை முழுவதையும் கெட்டோடச் செய்த இளமறவனின் தாய் இரவ மரத்தின் விதைபோலத் திரங்கிய கண் - முலைக்கண் கொண்ட வறிய நகிலினள் (புறம். 276:2-6), கரிய கண்ணையுடைய நெருங்கிய விருப்பத்தையுண்டாக் கும் முலைகளையும் கண்டார்க்கு மயக்கத்தை விளைக்கும் பார்வையினையு முடைய தையலை விரும்பிப் போருக்கெழுந்த வேந்தர் அளியர் (புறம். 345:10-12). தலைவி கரிய கண் மலர்ந்த முலையள் (புறம். 352:14).யானை மருப்பிற்கு இடப்பட்ட பூண் போன்ற அழகுடைய தலைவியது முலையின் கரிய கண் முழுவதும் தன் மார்பகத்துள் அடங்கத் தான் முயங்குதலை விலக்கற்க என்று தலைவன் அவளி டம் கூறினான் (அகம். 26:6-9). இரவுக்குறியில் தலைவி வட்டமான முலைக்கண் பதிந்து வடுக் செய்யத் தன்னை முயங்கினன் என்று தலைவன் உவந்தான் (அகம். 142:25), மார்பிலணிந்த கச்சு மூட்டறுமாறு கண் சினந்து விம்மி யெழுகின்ற தலைவியின் முலையை நோக்கிச் செவிலி அவளை இற்செறித்தனள் (அகம். 150:2-6). 'கரிய கண்ணை யுடைய விருப்பமிகு முலைகளை நெருங்க அணைத்த படியே எமக்குக் கங்குல் கழிவதாக' எனத் தலைவி யிடத்துக் கூறிய மொழியிற் பொய்த்துத் தலைவன் பிரிந்து சென்றான் (நற்.314:6-8). வையைப் புன லாட்டினால் மகலிரது நிறம் ஒளி பெற்று நீரால் ஏறுண்ட அவர்தம் முகமும் மூலைக்கண்ணும் மிகச் சிவந்தன (பரி. 10.94-96). 7.கண்ணோட்டம். காவனென்ஏயம் கண்ணிலி - கண்ணோட்டமில்லாதவன் - கொண்டுபோக ஆய் அண்டிரன் மேலுலகடைந்தனன் (புறம். 248:3-6). செல்வக் கடுங்கோ வாழியாதன் தன்னொடு நட் புக் கொண்டோர்க்கல்லது பிறர்க்குக் கண்ணஞ்ச மாட்டான் (பதி. 63:5). விசும்பு கண்ணழிய வேனில் நீடியது (அகம்.189:2). கண்ணில்லாத வாடைக் காற்று கல்வென்ற ஒலியொடு விரைந்து வந்து தங்கியது (அகம். 243:7,8). நாடனே, 'என் தோழி யது தோளிலே துயில்வதனை நீ நெஞ்சினால் இன்புறாயாயிலும் என்பால் உள்ள கண் காரண மாக வேனும் நீ அவளிடம் சென்று அருள்வாயாக; ஏனெனில், அவள் நின் கண்ணல்லது வேறொரு பாதுகாப்பும் இல்லாதவள்' என்று தோழி தலை வனிடம் வேண்டினாள் (நற்.388:8-11), 8. தேனடைக்கண். வேங்கைமரக்கிளையில் தொடுக் கப்பட்ட கொழுத்த கண்ணையுடைய தேனடை யில் ஈக்கள் மொய்த்ததனால் கசிந்து கல்லின் குழி களில் வடிந்த தேனில் குறச் சிறுவர் உண்ட மிச்சி லைக் குரங்குக் குட்டிகள் நக்கும் (நற். 168:1-5). கொல்லிமலையின் மேல்பக்கத்தில் காந்தளின் பூங் குலையி லிருந்து தேனீக்கள் தேனைக் கொண்டு வந்து பல கண்ணையுடைய தேனிறாலை இழைக் கும் (நற்.185:7-10). தலைவனது குன்றின் பக்க மலைகளின் மேலே தொடுக்கப்பட்ட தேன் நிறைந்த கண்ணையுடைய இறால் மேகத்தில் நுழையும் திங்களைப்போல் தோன்றும் (கலி. 42:22,23). 9. ஊற்றுக்கண். கானம் வெம்ப வேனில் நீடுதலால் கனைகளின் கண் - ஊற்றுக்கண் - நீரற்றன (அகம். 189:1-3). வேனிற்காலத்தில் சுனைகளில் கண்ணும் வற்றிப் போரும்படி ஞாயிறு தன் வெப்பத்தைப் பரப்பியது (அகம். 263: 2-4). ஆனிரைகள் பருகுதற் குக் கோவலர் வறிய நிலத்தில் கற்களை யுடைத்து இற்றறிமனறுகின்ற கண்ணினையுடைய கூவலைக்