________________
கண்கூடுதல் கண்கூடுதல் - ஒருங்கு கூடுதல். போர் மறவர் கண்கூடி ஒருங்கு கூடி-தங்கியிருப்பது பாசறை (புறம். 294:2; 372:4). பொருநன் ஏந்தியிருந்த பாலையாழ் கண் கூடி இருப்புப் பொருந்திய திண்பிணித் திவ வினை யுடையது (பொரு. 15,32) களிறுகள் தம்மில் சேர்ந்து மலைந்தாற் போன்று கண்கூடிய துறு கற்கள் காணப்பெற்றன (மலை. 384,. வாள் மயங்கு போர்க் களத்தில் களிறுகள் கண்கூடின (அகம். 32E17), சூாழற் பூவைப் பறித்துப் பூவும் மயிரும் மயங்க முடித்து வாரிமுடிக்கும்படி கண்கூடிய பயிர் தோளில் காதோடு சிறிது குலைந்து வீழத் தலைவி நடந்தாள் (கலி. 56:2-6). கண்டம் 1. கண்டத்திரை (ஆகுபெயர்). பாசறையில் ஓரிடத்தில் நெடிய குத்துக் கோலுடனே பண்ணிய கண்டத்தை - கண்டத்திரையை - வளைத்து அரச லுக்குக் கோயிலமைத்தனர் (மூல்லை. 43,44). 2.துண்டு. பரங்குன்றத்திலுள்ள செவ்வேளை வழி படச் சென்றோமில் சிலர் யானைகளை வழியினின் றும் அகற்றி மரங்களில் கட்டி அவற்றிற்கு உண வாகக் கண்டமாக - துண்டாக - முறித்த கரும் பைத் தருவர் (பரி. 19:30-34). கண்டல் - தாழை. கண்டல் - தாழை - நிறைந்த கடற் கரைச் சோலையில் குருகினம் ஒலித்தது (அகம். 260:3). கொக்கின் பார்வைக்கஞ்சிய நண்டு கண் டல் வேரிடத்தே யுள்ள வளையுட் புகுந்தது (குறு. 117:1-3). கடற்கரையில் நின்ற மலர் நிறைந்த கண் டல் கழிநீர் பெருகும் இடத்தி.. தர்ைத்து வெள் ளம் பெயரும் பொழுது தானும் பெயர்ந்தது (குறு. 340:4-6), தழை உடுப்பவர் கொய்யும் குழை அரும் பிய ஞாழல் தெளிந்த அலையின் புறத்தைத் தட வும் கண்டல் மரவேலியை யுடைய கடற்றுறைக் குரி யவன் தலைவன் (நற். 54:8-11), ஊர் கடற்கரையி லுள்ள கண்டல் மரங்களை வேலியாக வுடையது (நற். 74-- 18). புலால் நாற்றம் வீசும் அலைமோதிய வளைந்த அடியையுடைய கண்டல் மரத்து வேரின் கீழ் இரட்டையாக நெருங்கியிருக்கும் நண்டுகள் செல்லும் (நற்.123:9,10), கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த சிறுகுடித் தெருவிடத்து நேற்றிரவு ஒரு தேர்வந்தது எனச் சொல்லி ஊர் முழுவதும் அலர் எழுந்தது (நற்.191:5-7). கழிசூழ்த்த கண் டல் மர வேலியை யுடைய கொல்லையில் முள்ளிச் செடிகளால் வேய்ந்த சிறு குடில்களையுடைய பர தவர் உறைகின்ற பாக்க மெங்கும் கல்லென்றும் ஓசை உண்டாகும்படி நெடுந்தேரில் நம் தலைவர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று எனத்தோழி செவிலிக்குக் கூறி அறத்தொடு நின்றாள் (நற். 2072 78 கண்டீரக்கோன் I-9). பெருங்காற்று வீசியதால் கடற்கரைச் சோலையிதுள்ள கண்டல் மரத்திலிருந்து சுழன்று உதிர்ந்த பைங்காய் நீல நிறத்தை உடைய கழியின் உட்பக்கம் வீழ ஆங்குள்ள ஆம்பற் போது மலர்ந் தது (நற்.345:1-5). கண்டல் மரங்களை வேலியாக உடைய கழிசூழ்ந்த கொல்லைகளை உடையவன் நல்ல கடல் நாட்டுத் தலைவன் (நற்.363:1,2). கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழிசூழ்ந்த நல்லூரில் வீட்டிலிருந்து மகளிர் கழியிடத்து மீனைத் தேடுகின்ற பரதலருடைய படகுகளில் இருக்கும் விளக்குகளை எண்ணுவர் (நற்.372:10- 13). வையையாற்றில் நீராடிய மைந்தரிற் சிலர் நீரின் அலை மேலும் நுரை மேலும் கண்டல் தாதைத் தூவினர் (பரி. 10:101). கண்டிகை - கழுத்தணி, இளமொந்த மணிகளாற் செய்த தன்னிலொத்த முக்கண்டன் கட்டுவடமா கிய பலபல நிறத்தை யுடைய கண்டிகை - கழுத் தனி - அணிந்த (பரத்தையாகிய) குதிரையைத் தலை வன் ஊர்ந்தான் (கலி. 96:14-21). கண்டி நுண்கோல் - துணிக்கப்பெற்ற நுண்ணியகோல், கண்டி துண்கோலை - துணிக்கப்பெற்ற நுண்ணிய கோலை- கையிலேந்தி ஊர் மன்றத்தேயிருந்து தலைவன் புகழ்களைக் கூறி வாழ்த்தும் அகவலன் -(பாணன்) குதிரைகளைப் பெறுவான் (பதி. 43:26-28). கண்டீரக்கோப்பெருகள்ளி - ஏழு வள்ளல்களுள் ஒருவன், இவன் கண்டீரக்கோ எனவும், கண்டீரக்கோப் பெருநள்ளி எனவும் கூறப்படுவன். இணங்கண்டீரக் கோவும் உண்மையின், இவன் பெருநள்ளி எனப்பட் டான். இவன் இரவலர் வறுமைத் துயர் போக்கும் வீரனாய் விளங்கினான். தோட்டி என்னும் மலையைத் தன்னகத்தே கொண்ட கண்டீர நாட்டிற் குரியவன் (ஔவை. து. புறம், 148 முன்னுரை). இது மலை நாடாதலின் இவன் நளிமலைநாடன் நள்ளி எனப் பாராட்டப் பெற்றான், நன்லி பெருஞ்செல்வம் நல்கியதால் தம் இனத்தார் ஆடல் பாடல்களை அடியோடு மறந்தனர் என்பதைப் புறம் 149, 153- ஆம் பாக்களில் வன்பரணர் புலப்படுத்துவர். இவ் வள்ளல் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளா மல் உணவு, அணிகளில் முதலியவற்றைக் கொடுத் தோம்பிய வண்மையையும் புகழ்வேண்டாப் பெற்றி மையையும் இப்புறவர் சிறப்பித்துள்ளார். நெ பாணாற்றுப்படை நள்ளியை 'நட்டோர் உலப்ப நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த நளிமலை நாடன்' என்று சிறப்பிக்கும் (193107). கண்டீரக்கோன் - ஓர் அரசன், கண்டீரக்கோப்பெரு நள்ளிக்கு இளையொனாதலின் இலன் இளங்