பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சங்க இலக்கியம்

கவிச்சக்கரவர்த்தி க ம் ப ந | ட ரு ம், அயோத்திநகர மாளிகைகளை வருணிக்குமுகத்தான், அம்மாளிகையின் மீது வேயப்பெற்ற பொன் தகடுகள். இளவெயிலின் கதிர்கள் வெள்ளியங்கிரியின் மீது விரிதலால் எழும் ஒளியைப் போன்று ஒளிவீசின என்று வருணித்துள்ளார்.

புள்ளியம் புறவு இறை பொருந்து மாளிகை தள்ளருங் தமணியத் தகடு வேய்ந்தன எள்ளருங் கதிரவன் இளவெயிற் குழாம் வெள்ளியங்கிரி மிசை விரிந்த போலுமே

-கம்ப: நகரப்படலம் 28.

உலகில் இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மேல். கவிஞன் தன் குறிப்பினைப் பொருட்பொருத்தமுற ஏற்றி வைத்துரைப்பது தற்குறிப்பேற்றம் என்னும் அணியின் பாற்படும். இவ் அணியினைச் சேக்கிழார் பெருமானும் கம்ப நாடரும் கதிரவன் வருணனை கொண்டே கையாண் டிருப்பது அவர் தம் கவிச் சிறப்பைக் காட்டுவதோடு, கதிரவன் கவிஞர்களுக்குப் பயன்படும் வெற்றியினையும் ஒருங்கே உணர்த்தும்.

காலையில் கீழ்த்திசையில் கதிரவன் தோன்றுவது, உலகில் இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். இவ்வாறு உலகில் இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சி யினைக் கவிஞர், நம்பியாரூரரின் திருமணக் காட்சியைக் காண்பான் போலக் காமுற்ற மனத்துடன் கதிரவன் உதயஞ் செய்தான் என்று குறிப்பிட்டிருப்பது தற்குறிப்பேற்ற அணியின் பாற்படும்.

மாமறை விதிவழாமன் மணத்துறைக்

கடன்களாற்றித்

தூமறை மூதூர்க் கங்குன் மங்கலங்

துவன்றி யார்ப்பத்