பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 115

தேமரு தொடையன் மார்பன் திருமணக்

கோலங் கானக் காமரு மனத் தான் போலக் கதிரவன்

உதயஞ் செய்தான்.

-பெரிய: தடுத்தாட்: 13.

கைகேயி தான் முன்னாளிற் பெற்ற வரங்களில் இரண்டிலொன்றால் சீதைகேள்வன் இராமனைக் காட்டிற்கு அனுப்புவதற்குத் தசரதனிடம் ஒப்புதல் பெற்றாள். இச் செய்தியால் அயோத்திவாழ் மக்கள் அவதியுற்றனர்; அஃறிணையுயிர்கள் வாட்டமுற்றன: இச் செயலால் கோப முற்ற கதிரவன் கைகேயியின்மாட்டுப் பெருஞ்சினங் கொண்டு கீழ்த்திசையில் சிவந்து எழுந்தான் என்கிறார் கம்பர்.

பாப முற்றிய பேதை செய்த பகைத்திறத்தினில்

வெய்யவன்

கோப முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன் குரை

குன்றிலே

-கம்ப; அயோ கைகேயி சூழ்வினைப்படலம்: 61.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் மகாகவி பாரதியார்,

புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து விந்தை செய்யும் சோதி

யினைக் காலைக் கதிர ழகின் கற்பனைகள் பாடுகின்றேன்” என்று கூறிப் பின்வருமாறு கதிரவனைப் புனைந்துரைத் துள்ளார்:

தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதிகவர்ந்து சுடர்மயமாய் விந்தையினை ஒதிப்புகழ்வார் உவமையொன்று காண்டாரோ?