பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் I 17

யூட்டிற்றே” என்றும், “மலையெலாம் சோலை எல்லாம் நனைக்கின்றாய் சுடர்ப்பொன்னிரால்’ என்றும் கதிரவனைப் பாடியுள்ளார். சமுதாயவுணர்வுடன் பாடும் கவிஞர் அவர் என்பதனால்,

பாழ் என்ற நிலையில் வாழ்வைப் பயிரிட்ட உழவன் நீ கூழுக்கு வேறாம் நீயே! குளிருக்குப் போர்வை நீயே

என்றும் பாடியிருக்கக் காண்கிறோம்.

எனவே தமிழ் இலக்கியங்களில் கதிரவன் அன்றுதொட்டு இன்று வரை தமிழ்க் கவிஞர்களாற் சிறப்பிடம் தரப்பெற்று ஒர் உயரிய கற்பனையில் இடம்பெற்று நிற்கிறான் எனலாம். பலர் புகழ் ஞாயிறாக, பலர்தொழு ஞாயிறாக விளங்கும் கதிரவன் இயற்கையிற் புதுக்கோலங்காட்டி வழங்கும் விந்தைமிகு காட்சிகள் பலப்பலவாகும், அக் காட்சிகளில் திளைத்து மனம் இன்புறுவதே மகிழ்ச்சியும். அமைதியும் பெறுவதற்குரிய ஆறாகும்; அருமை வழியாகும்.