பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சங்க இலக்கியத்தில்

அணிநலம்

தமிழிலக்கிய வரலாற்றில் சங்க காலம் பொற்காலம் எனப் போற்றப்பெறும் பெற்றி வாய்ந்ததாகும். முன்னைப் பழமைக் கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் சங்க இலக்கியம் தொல்காப்பிய இலக்கணத்தின் பெரும்பகுதியினையொட்டிக் காணப்படுகின்றது. பழந்தமிழ் இலக்கியமாகிய சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் பெரும்பாலும் பாடுபொருளாகக்கொண்டு எழுந்துள்ளது எனலாம். அறிஞர் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் “காதலும் போரும் பழந்தமிழ் இலக்கியத்தின் பிழிவாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாக வும், அறிவியலும் மானிடவியலும் இக்கால இலக்கியங்களின் போக்காகவும் இலங்குகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

சங்கத் தமிழ்ப் பாக்கள் அவை எழுந்த காலத்திலேயே பெரிதும் மக்களால் போற்றி வரவேற்கப்பட்டன எனலாம். ஏனெனில் பல அரசுகள் எழுந்த தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் சங்கம் வளர்த்த தலையாய நகரமாகத் துலங்கியது. ஆண்டுதோறும் புத்தம் புதிய கவிதைகளைத் தமிழ் நாடெங் கிலும் வாழ்ந்த கவிஞர்கள் இயற்றிக் கொண்டுவந்து மாடங் கள் நிறைந்த மதுரை மாநகரில் இளவேனிற்காலத்து நிலாக் கால இரவுகளில் பொதுமக்கள் பலரும் கூடியுள்ள அவையில் அரங்கேற்றம் செய்வர். பொருள் தேடச் சென்ற தலைவன் தான் திரட்ட நினைத்த அளவு பொருள் சேர்க்க முடியாமற் போய்விடினுங்கூட, புத்தம் புதுக் கவிதைகள் அரங்கேறும் அவ் இளவேனிற் காலத்தின் நிலவெரிக்கும் இனிய இராப்