பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சங்க இலக்கியம்

தரப்பட்ட உவமைகளைப் பிற்காலத்தார் அவ்வாறே

பின்பற்றி வழங்கியுள்ளனர்” (தமிழ் இலக்கிய வரலாறு, ப. 59.)

பிற்காலத்தெழுந்த அணியிலக்கண நூல் தண்டியலங்கார மாகும். இந் நூலிற் பல அணிவகைகள் கூறப்பட்டிருந்தாலும் பழைய நூலான தொல்காப்பியத்தில் உவமை அணி ஒன்றே கூறப்பட்டுள்ளது. ஒரு பொருளைத் தக்க ஒப்புமை காட்டி விளக்கும் உவமை, வினை. பயன், மெய், உரு ஆகிய நிலைக்களன்களில் பிறக்கிறது எனத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விளக்குகின்றது.

வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்

-தொல். நூற்பா 272

என்பது தொல்காப்பிய நூற்பா.

மேலும் அவர் உயர்ந்த பொருள்வழி உவமையை விளக்க வேண்டும் என்பர்.

உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை

-தொல். நூற்பா 274.

மேலும், சிறப்பு. நலன், காதல், வலி ஆகிய சிறப்புக் களால் உவமை சிறப்புறும் என்பர் தொல்காப்பியனார்.

சிறப்பே நலனே காதல் வலியொடு அந்ாகாற் பண்பும் நிலைக்களம் என்ப

-தொல். நூற்பா 275 உயர்ந்த பொருளையே உவமை காட்ட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,

அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்

-பட்டினப்பாலை 298 என்ற அடியினைக் கூறுவர். வலிமை மிகுதியுடைய விலங்கு கள் பலவற்றினும் அரிமா உயர்ந்த விலங்காதலின் அஃது