பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 121

உவமையாகக் காட்டப்பட்டது என்பர் இளம்பூரணர். குறுந் தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலின் முதலடியான ‘தாமரை புரையும் காமர் சேவடி என்பதனைக் காட்டி, சிறப்புடைய பல பொருள்களினும் தாமரை உயர்ந்ததாதலின் அஃது உவமை கூறப்பட்டது என்று அவர் மேலும் கூறுவர். இவ்வாறே சிறப்புப்பற்றி வந்த உவமைக்கு,

முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை எழா அல்

- பொருநர். 54-56

என்ற அடிகளையும், நலம் பற்றி வந்த உவமைக்கு,

ஒவத் தன்ன வியனுடை வரைப்பின்

-புறம். 251:6 என்ற அடியினையும், காதல் பற்றி வந்த உவமைக்கு,

கண்போல்வான் ஒருவ னுளன் என்னும் அடியினையும், வலிமை பற்றி வந்த உவமைக்கு,

அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்

-பட்டினப்பாலை 298 என்ற அடியினையும் எடுத்துக்காட்டுவர்.

இனி, சங்க இலக்கியத்திற் காணலாகும் உவமைகள் சிலவற்றைக் காணலாம்.

எடுத்துக்காட்டுவமை அணி

பிற்காலத்தே எடுத்துக்காட்டு உவமையணி என்று குறிப்பிடப்பெறும் அணி ஒரோவழி, சங்க இலக்கியத்திற் காணப்படுகின்றது. இவ் அணியிற் கூறப்பெறும் செய்திகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய - ஐயந்திரிபற ஒப்புக் கொள்ளக் கூடிய செய்திகள் எனலாம். ஒரு புதிய கருத் தொன்றைச் சொல்ல வரும் புலவன் உலக மக்கள்

சங்-8