பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சங்க இலக்கியம்

ஏற்கெனவே உறுதியாக ஒப்புக்கொண்ட சில உண்மைகளை எடுத்துக்காட்டி, அவை போலவேதான் இப்போது கூறவரும் செய்தியும் ஒக்கும் என்பான். எடுத்துக்காட்டாக ஒன்று காணலாம்.

பாண்டிய வேந்தன் போர்க்களம் புகுந்தால் அவனை யாரும் எதிர்த்து வெல்ல முடியாது என்பது கவிஞன் உணர்த் தவரும் செய்தியாகும். இதனை விளக்குவதற்கு உலகமக்கள் இயல்பாகவும் எளிதாகவும் அறிந்த மூன்று செய்திகளை எடுத்துக் காட்டுகளாகக் காட்டுகிறான் கவிஞன். முதலாவது கருத்து, வெள்ளம் அளவுக்கு மீறி மிகுந்தால் அதனைத் தடுத்த நிறுத்த அணைகளால் முடியாது என்பதாகும். இரண்டாவது கருத்து, தீ கை கடந்து மிகுமாயின் அதிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற ஒரு வழியும் இல்லை என்பதாகும். மூன்றாவது கருத்து, காற்று எல்லை கடந்து வீசத் தொடங்கினால் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதாகும். இவ்வாறு உலகம் உறுதி யாகத் தொன்றுதொட்டு நன்கறிந்து மூன்று செய்திகளைக் கூறி, அவற்றிற்கு நிகராக மன்னனின் மாற்ற முடியாத சினத்தையும் குறிப்பிட்டிருக்கும் புலவர் திறம் பின்வரும் புறப் பாடலடிகளால் விளங்கும்.

நீர் மிகின் சிறையும் இல்லை தீமிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி

-புறநானூறு, 50 : 1-4. இறுதி அடியில் இடம் பெற்றிருக்கும் “அவற்றோர் அன்ன’ என்னும் உவம உருபு, முதலிற் கூறப்பட்ட மூன்று கருத்துக்களோடு இறுதியிற் புலவர் கூறவந்த கருத்தினை ஒன்றாக இணைக்கின்றது.

பிறிதொரு புறநானூற்றுப் பாடலும் இக் கருத்தினைச் சிறக்க விளக்கக் காணலாம்.