பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 123

மலைச்சாரலில் வாழும் மறப்புலி மாறுபட்டுச் சினந் தெழுந்தால் அதனை எதிர்க்கும் மான் கூட்டம் ஏதும் இல்லை; கதிரவன் சினந்து நின்றால் அதன் முன் இருள் நிற்காது. நுண்ணிய மணல் தெறிக்கவும், கல் பிளக்கவும் நடக்கும் எருதுக்குத் தான் நடப்பதற்கெனத் தனித்துறை பதும் தேவையில்லை. இதைப்போலவே அரசன் போர்க் களம் புகுந்து விட்டால் அவனை எதிர்த்து நிற்கும் வீரர் கரும் இல்லை என்ற கருத்து. பின்வரும் பாடலிற் குறிப்பிடப்படுகின்றது.

அடைமல்கு குள வியொடு கமழும் சாரல் மறப்புலி உடலின் மான் கணம் உளவோ மருவின் விசும்பில் மாதிரத் தீண்டிய இருளும் உண்டோ ஞாயிறு சினவின்

அச்சொடு தாக்கப் பாருற் றியங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய அரிமணல் ளுெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ

பொருநரும் உளரோ நீகளம் புகினே

-புறநானூறு 90:2.9, 13

தற்குறிப்பேற்ற உவமை

உலகில் இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சியின்மீது கவிஞன் தன் கற்பனையை ஏற்றிப் பொருள் பொருத்தமுற உவமை கூறுவது தற்குறிப்பேற்றம் எனக் கூறப்பெறும்.

ஊடியிருந்த காதலரைக் கூடி மகிழுமாறு கூவியழைப்பது போலக் குயில் கூவுதல் விளங்கியது எனப் பின்வரும் நற்றிணைப் பாடல் நவிலும்.

பொதும்புதோறு அல்கும் பூங்கண் இருங்குயில் கவறுபெயர்த் தன்ன கில்லா வாழ்க்கையிட்டு