பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சங்க இலக்கியம்

அகறல் ஒம்புமின் அறிவுடை யீரெனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல் மெய்யுற இருந்து மேவர நுவல

-நற்றிணை 343:4-8

சோலையில் இயல்பாகக் குயில் கூவுவதனை அஃது ஊடியிருக்கும் காதலர்களைக் கூடி மகிழுங்கள் என்று

கூவுவதாகக் கவிஞர் குறிப்பிடுவது தற்குறிப்பேற்றவணி யாகும்.

தடுமாறு உவமை

ஒரே இடத்தில் பொருளுக்கு உவமை கூறப்பட்டு, மீண்டும் அவ்வுவமை பொருளாகவும் தோன்ற அமைக்கப் பட்டால் அது தடுமாறுவமம் என்று கூறப்படும்.

நற்றிணைப் பாடலொன்றில் இத்தகைய தடுமாறுவமம் ஒன்றனைக் காணலாம்.

தும்பியொன்று நாவற்பழத்தைத் தன் இனமாகக் கருதி அதனை மொய்க்கின்றது. அந்தத் தும் பியை நாவற்பழம் எனக் கருதி நண்டு ஒன்று அதனைப்பற்ற முயல்கிறது. அப்போது அத் தும்பி வாய்விட்டுக் கத்துகின்றது. இதில் தும்பி நாவற்பழத்திற்கும், நாவற்பழம் தும்பிக்கும் உவமைப் படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.

புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழம்செத்துப் பல்கால் அலவன் கொண்ட கோட்டுர்ந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்

-நற்றிணை 35:2-5

விலக்குவமை

D - 5 5Ծ) ԼԸ 5 ՅԾ) ՅIT முதற்கண் அமைத்து அவற்றைக்

காரணங்கூறி மறுத்துக் கூறலும் உண்டு. அதனை விலக்குவமை அணி என்பர்.