பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சங்க இலக்கியம்

உவமைகளாகவும் பொருளாகவும் அமைக்கப்பெற்று ஒரு தொடர்ச்சியாக ஒரு தொடர்பினைப் பெற்று வருகின்றது.

நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பென மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன் மயில்மயில் குளிக்கும் சாயல்; சாஅய் உயங்குங்ாய் நாவின் நல்லெழில் அசை.இ வயங்கிழை உலறிய அடியின் அடிதொடர்ந்து ஈர்ந்துநிலங் தோயும் இரும்பிடித் தடக்கையின் சேர்ந்துடன் செறிந்த குறங்கின்; குறங்கென மால்வரை யொழுகிய வாழை: வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி, ஒதி நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக் களிச்சுரும்பு அரற்றும் சுணங்கின்; சுணங்குபிதிர்ந்து யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப் பூனகத் தொடுங்கிய வெம்முலை; முலையென வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின் இன்சேறு இகுதரும் எயிற்றின் எயிறென

-சிறுபாணாற்றுப்படை, 14.28

இரட்டை உவமை

தொல் காப்பியம் சொல்லியலில் “இரட்டைக்கிளவி விளக்கப்படுகின்றது. இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே’ என்பது தொல்காப்பிய நூற்பா. சலசல, பளபள, மடமட. படபட முதலானவை இரட்டைக் கிளவிகளாகும். அடையும் அது சிறப்பிக்கும் பொருளும், உவமையிலும் அடையும் பொருளுமாக இயைந்து வரும்.

எடுத்துக்காட்டாக, கண்பின் காயின் சுண்ணம் பூசப் பெற்ற மார்பு, பொன் துகள் படிந்த உரைகல்லை உவமை யாகப் பெற்றுள்ளதனைப் பெரும்பாணாற்றுப் படையில் «БЛг б???лгéãолгLD,