பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 131

பிறிதுமொழிதலணி

கவிஞன், தான் கருதிய பொருளைக் கூறாமல் வெறும் உவமையை மட்டும் கூறிவிடுதல் ஒட்டணி அல்லது பிறிது மொழிதலணி எனப்படும்.

கருதிய பொருள் தொகுத்து அது புலப்படுத்தற்கு ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டென

لا اoluorgb)

-தண்டியலங்காரம் 32

இவ்வணியினை நன்கு விளக்கக் கலித்தொகைப் பாட லொன்று எடுத்துக்காட்டாய் இலங்குகின்றது. எவரொருவரும் குளத்திற்குச் சென்று நீரைப் பருகுவது என்பது தங்கள் தாக விடாயைத் தீர்த்துக்கொள்வதற்குத் தானே தவிர அச் செயல் நீருக்கு இனிமை தரும் என்பதால் அன்று. இது போன்றே காதலன் ஒருவன் தான் விரும்பும் காதலியினைத் தழுவிக் கொள்வது தன் விருப்பம் தணிவதற்குத் தானே தவிர, அச் செயல் காதலிக்கு உவப்பளிக்குமா இல்லையா என்பதற்காக அன்று.

வேட்டார்க்கு இனிதாயின் அல்லது நீர்க்கு: இனிதன்று உண்பவோ நீருண்பவர்

-கலித்தொகை 62 : 10-11

நற்றிணைப் பாடலொன்றும் பிறிதுமொழிதலணி துலங்கத் திகழ்வதனைக் காணலாம்.

மரம் சாகும் அளவிற்கு அதனை வெட்டி மருந்தாக மக்கள் கொள்ள மாட்டார்கள். அதுபோலவே உடல் உரம் அழியும் அளவிற்குத் தவத்தை மேற்கொள்ள மாட்டார்கள். மக்கள் வளம் கெடும் அளவிற்கு மன்னர் வரிப்பொருளைக் கொள்ள மாட்டார்கள்,