பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 133

பரிபாடலில் மாலை உவமை மாண்புறப் பொருந்தி வந்திருக்கக் காணலாம்.

திருமாலின் கொப்பூழில் தோன்றிய தாமரைப் பூவினைப் போன்றது சீறுார்; அப்பூவின் இதழைப் போன்றன தெருக்கள்: இதழகத்து அரிய முகையைப் போன்றது அரசன் கோயில்; அப்பொகுட்டில் உள்ள தாதுக்களைப் போன்றது தண்டமிழ்க் குடிமக்கள். அத் தாதினைத் தேர்ந்து உண்ணவரும் பறவைகளைப் போன்றவர் பரிசிலர் என்று குறிப்பிடப் பெறுவதனைக் காணலாம். கீழ்க்காணும் பரிபாடலில் உவமைச் செய்திகள் அந்தாதித் தொடை போன்று அமைந்து, ஒன்றனோடு ஒன்று தொடர்பு பெற்று மாலைபோல் காட்சியளிக்கிறது.

மாயோ கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீறுார்: பூவின் இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண்டமிழ்க் குடிமக்கள் தாதுண், பறவை யனையர் பரிசில் வினைஞர்

-பரிபாடல் 7: 1 - 6

வேற்றுமை அணி

பொருளுக்கும் உவமைக்கும் வேறுபாடு காட்டி, இவை யிரண்டும் ஒவ்வா எனக் குறிப்பிட்டுப் பொருளைச் சிறப்பித்தல் வேற்றுமை அணி எனப்படும். உவமையினும் பொருளே சிறந்தது என்பது இதன் தனிச் சிறப்பாகும்.

புறநானூற்றில் வேற்றுமையணிக்குச் சிறந்த எடுத்துக் காட்டு காணலாம். சேர மன்னனொருவன் கதிரவனோடு உவமிக்கப்படுகின்றான். இவ்வுவமையில் க தி ர வ ன் சேரனோடு மாறுபடும் சிறப்புகளைச் சுட்டிக் காட்டிப் பின் வேறுபாடும் காட்டப்படுகின்றது.