பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 139

ஏனை உவமம் தானுணர் வகைத்தே

-தொல். அகத். 49 கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளைக் கது உ மூரன்

-குறுந்தொகை 8:1-2

‘வயலருகிலுள்ள மாமரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தைப் பொய்கையிலுள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுதற்கு இடமாகிய ஊரையுடைய தலைவன்’ என்பது இதன் பொருளாகும்.

ஈண்டுக் கழனியினைத் தலைமகள் வாழும் ஊராகவும், மாமரத்தினைத் தலைமகளாகவும், மாம்பழத்தினைத் தலைமகனாகவும், பழனத்தினைப் பரத்தையர் வாழும் சேரியாகவும், வாளை மீன்களைப் பரத்தையராகவும் கொண்டு பார்த்தால் ஓர் அரிய உள்ளுறைக் கருத்துப் புலப்படும். தலைமகனே தலைமகளை விட்டு நீங்கிப் பரத்தையை நாடிச் சேர்ந்தானென்பதும், பரத்தை எந்த வகையிலும் பழிக்கத்தக்கவள் அல்லள் என்பதும் பொருள் வெளிப்படையாகும்.

இறைச்சி

இறைச்சி என்பது கருப்பொருளின் புறத்ததாகவே பெறப்படும் குறிப்புப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருள்புறத் ததுவே

-தொல். பொருள். 229 கருப்பொருள்களின் புறத்ததாகக் கொள்ளப்படும் இறைச்சி வேறு; உவமை வழியாக உள்ளுறையைப் போல அமைக்கும் இறைச்சி வேறு என்பர் நச்சினார்க்கினியர்.

இறைச்சியில் பிறக்கும் பொருளு மாருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே

-தொல். 230