பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சங்க இலக்கியம்

இலங்கும் அருவித்தே இலங்கும் அகுவித்தே

வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற

சூள் பேனான் பொய்த்தான மலை

-கலித்தொகை 4

இப் பகுதிக்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் வருமாறு:

‘சூளைப் பொய்த்தான் என்பதே கூற வேண்டும் பொருள். அதன் புறத்தே இங்ஙனம் பொய்த்தான் மலையகத்து நீர் திகழ்வான் என் என இறைச்சிப் பொருள் தோன்றியவாறு காண்க’ என்பர்.

இவ்வாறு சங்க இலக்கியத்தில் உவமை என்கின்ற ஒர் அணியே பல்வேறு வகையிற் பாங்குற மிளிர்ந்து நிற்கிறது. சங்க இலக்கிய உவமைகள் உணர்ச் சிக்கு நிலைக்களனாய், கற்பனைக்கு ஊற்றாய், வடிவம் அமைந்து சிறந்த கருத்தின் கொள்கலனாய்த் திகழ்வதனைச் சிறப் புறக் காணலாம். சங்ககாலக் கவிஞர்கள் இயற்கையை துணுகிக் கண்டு, மக்கள் வாழ்க்கையினை அவ்வினிய இயற் கையின் பின்னணியில் வடித்துப் படிப்போர் மனம் மகிழ் வதோடு கருத்து விளக்கமும் பெறும் அளவில் உவமைகளைக் கையாண்டுள்ளனர். சங்க இலக்கியம் உவமைக் களஞ்சிய மாக அமைந்து, நமக்கு உவமை ஊட்டுவதோடு, வாழ்க்கையை வழிநடத்திச் செல்லக் கருத்துக் கருவூலங்கள் தந்து ஒளிவிடுகின்றன எனில் அக்கூற்று மிகையாகாது.