பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சங்க இலக்கியம்

ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளைக் கொள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர். பெரிய பட்டினங்களிலும் நகரங்களி லும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும், ஊர்களிலும் கிராமங்களிலும் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ் நாட்டில் மட்டுமன்றிப் பிற நாடுகளிலும் பண்டமாற்று முறை இருந்து வ ந் த து. தமிழகத்திலிருந்த பண்டமாற்று முறையினைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

1. இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தைப் பெற்றுக் கொண்டதை முதுகூத்தனார்,

பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன் -குறுந். 221:3.4 என்னும் தொடரால் குறிக்கின்றார்.

2. ஆயர் மகளிர் தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் விளக்குகின்றார்.

உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ நாள்மோர் மாறும் .........

+ + H H H H H = H = * * ஆய்மகள் அளவில் உணவில் கிளையுடன் அருத்தி

-பெரும்பாண். 155.165

3. இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யா மல் காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து வைத்தார் கள். குறிப்பிட்ட தொகை காசு சேர்ந்தபோது அக் காசைக் கொடுத்துப் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினர் என்பதனை,