பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 143

நெய்விலை கூட்டிப் பசும்பொன் கொள்வாள் எருமை நல்லான் கருங்ாகு பெறுஉம் மடிவாய்க் கோவலர்

-பெரும்பாண். 164-166

என்னும் பகுதியால் விளக்குகின்றார்.

4. வேடன் தான் வேட்டையாடிக் கொணர்ந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக் கொண்டதைக் கோவூர்கிழார் கூறுகின்றார். இடைச்சியரும் உழவனுக்குத் தயிரைக் கொடுத்து நெல்லைப் பெற்றுக் கொண்டவர் என்று இப் புலவரே கூறுகின்றார்.

கானுறை வாழ்க்கைக் கதங்ாய் வேட்டுவன் மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பும் கிறைய ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல் முகந்தவர் கொடுப்ப உவந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் கன்னாடு

-புறம். 33:1-8

5. பாணர் உள்நாட்டு நீர் நிலைகளில் வலை வீசி யும் தூண்டிலிட்டும் பிடித்த மீன்களைப் பாண்மகளிர் ஊரில் கொண்டுபோய்ப் பயற்றுக்கும் தானியத்துக்கும் மாற்றிய செய்தியினை,

முள் எயிற்றும் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த அகன் பெருவட்டி கிறைய மனையோள் அரிகால் பெரும்பயறு நிறைக்கும்

-ஐங்குறு. மருதம். புலவிப்பத்து. 47 என்று ஓரம்போகியார் குறிப்பிடுகின்றார்.