பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 145.

நெல்லும் உப்பும் நேரே, ஊரீர் கொள்ளிரோ வெனச் சேரிதொறும் நுவலும்

உப்பை நெல்லுக்கு மாற்றிய உப்பு வணிகர் தமக்குக் கிடைத்த நெல்லைச் சிறு படகுககளில் ஏற்றிக்கொண்டு கழிகளில் ஒட்டிச் சென்றதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்:

குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி

நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி

-பட்டினப்பாலை. 28.30

உப்பை நெல்லுக்கு மாற்றியதை உலோச்சனார் கூறுகின்றார்:

உமணர் தந்த உப்பு கொடை நெல்

உப்பு விற்கும் நெய்தல் நிலப் பெண்ணை அக. நானுறு குறிப்பிடுகின்றது:

நெல் லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரி விலை மாறு கூறலின்

எருதுகள் இழுத்துச் செல்லும் உப்பு வண்டிகளைப் பற்றி சிறுபாணாற்றுப்படை:

நோன்பகட் டுமணர் ஒருகையொடு வந்த என்று குறிப்பிடுகின்றது.

7. பரதர் கடலில் பிடித்த சுறா இறால் போன் ற மீன்களைப் பரதவர் மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றியதைக் குன்றியனார் நவில்கின்றார்.

இனிதுபெறு பெருமீன் எளிதினில்மாறி

-நற். 239:3.