பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15ტ

சங்க இலக்கியம்

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்

-காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் -புறம். 353:1-2

அம்மா மேனி ஐதமை நுசுப்பில் பல்காசு கிறைத்த கோடேங் தல்குல் மெல்லியல் குறுமகள்

-மதுரைப் போத்தனார்

-அகம். 75:18-20

பொலம்பசும் பாண்டிற் காசுறிறை அல்குல் இலங்குவளை மென்றோள்

-ஐங்குறு-பாலை-செலவழுங்குவித்தபத்து-10

4. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்க்கு 40 நூறாயிரம் பொன் அவன் பரிசிலாகக் கொடுத்தான் என்று கூறப்படுகிறது. (பதிற்றுப்பத்து - நான்காம் பத்து - பதிகம்

5. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 6ஆம்பத்துப் பாடிய காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்க்கு அவ் வரசன் நகை செய்து அணிதற்காக ஒன்பது காப்பொன்னையும் நூறாயிரம் காணமும் கொடுத்தான்.

6. செல்வக்கடுங்கோ ஆழியாதனைப் பாடிய, கபிலருக்குப் பரிசாக அவ் வரசன் நூறாயிரம் காணம் வழங்கினான் என்று ஏழாம் பத்துப் பதிகம் கூறுகிறது.

7. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் பரிசிலாகக் கொடுத்தான் என்பதைப் பதிற்றுப்பத்து 8ஆம் பத்துப் பதிகத்தினால் தெளிகிறோம்.

8. இளம்சேரலிரும்பொறை தன்னைப்பாடிய பெருங் குன்றுார் கிழார்க்கு முப்பதினாயிரம் காணம் பரிசிலாகக்