பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 151.

கொடுத்தான் என்பதை 9ஆம் பத்தின் பாயிரத்தினால் உணர்கிறோம்.

9. பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குச் சோழன் கரிகாலன் நூறாயிரங் . காணம் பரிசு வழங்கினான்.

இதனால் காணம் என்னும் பொற்காசு அக் காலத் தில் வழங்கியதை அறிகிறோம்.

10. செங்கம் என்னும் ஊரில் ஈயக்காசுகள் வழங்கி வந்ததை அங்கு கிடைத்த பழங்காசுகளிலிருந்து தெளி கிறோம். அந்த ஈயக்கா சுகளில் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களால் அவை கடைச்சங்க காலத்தில் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வழங்கி வந்தவை . என்பது தெரிகிறது. அந்தக் காசில் உள்ள எழுத்துக்கள் தேய்ந்து உருத்தெரியாமல் மழுங்கிப் போனமையால் அவ்வெழுத்துக்களின் வாசகத்தை அறியமுடியவில்லை.

இந்தக் காசுகளே அன்றி அக்காலத்தில் கடல் கடந்த கப்பல் வாணிகத்தின் மூலமாக உரோம (யவன) தேசத்து நாணயங்கள் தமிழ்நாட்டில் வழங்கி வந்தன. அக் காசுகள் சமீப காலத்தில் ஏராளமாகப் புதையல் களிலிருந்து கிடைத்துள்ளன.

தரைவாணிகம் போக்குவரத்துச் சாதனங்கள்

வாணிகப் பொருட்களை ஓரிடத்தினின்று வேறோர் இடத்திற்குப் கொண்டு செல்ல எருது, கழுதை, வண்டி, படகு, பாய்க்கப்பல்களைப் பயன்படுத்தினர்.

சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக்காலத்தில் கொண்டு வரப்பட்டன. இவை வணிகப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை. அரசரும், செல்வந்தரும் ஊர்தியாகப் பயன்படுத்தினர்.