பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

152 சங்க இலக்கியம்

வெளிநாடுகளிலிருந்து அத்திரி என்னும் கோவேறு கழுதைகளும் வரவழைக்கப்பட்டன. அவையும் ஊர்தியாக மட்டுமே பயன்படுடு தப்பட்டன.

கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி வடிமணி நெடுந்தேர் பூண

-நக்கீரர், அகம். 350:6.7

கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி கெடுகீர் இருங்கழி பரிமெலிந் தகைஇ

-உலோச்சனார் - அகம். 120:10-11

கழிச்சேறு ஆடிய கனைக்கால் அத்திரி குளம்பிலும் சேயிறா ஒடுங்கின கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே

-நற்றிணை 273:7,9

சிலப்பதிகாரத்திலும் கோவலன் அத்திரி ஊர்ந்து சென்ற செய்தி தெரியவருகிறது. எனவே அற்றை நாளில் அத்திரி உயர்தர ஊர்தியாகக் கருதப்பட்டமை புலனாகிறது.

வணிகப் பொருட்களைக் கொண்டுபோவதற்கு எருது கள் பயன்பட்டன. மாட்டு வண்டிகளில் வணிகப் பொருட் களை எடுத்துச்சென்றனர். இதற்கு வணிகச் சாத்து என்பது பெயர்.

1. வணிகர் வாணிகப் பொருட்களை ஊர் ஊராக எடுத்துச் செல்லக் கழுதைகளையும் பயன்படுத்தினர். பாறைகளும் குன்றுகளும் உள்ள நாட்டிற்குச் செல்லக்

கழுதைகள் பயன்பட்டன. கழுதைகளின் முதுகின் மேல் பொதிகளை ஏற்றி வணிகச்சாத்து ஒன்று சேர்ந்து போயிற்று.

நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றை புறகிறைப் பண்டத்துப் பொறை

-மருதனிள நாகனார் அகம். 343:12.15