பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 155

சரக்குகளை ஏற்றிக்கொண்டுபோய் அயல்நாடுகளில் விற்று, அந் நாடுகளிலிருந்து வேறு பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்தார்கள். தமிழ்நாட்டுக்குக் கிழக்கே வெகு தூரத்தில் ஆயிரம் மைலுக்கப்பால் இருந்த காழகம், கடாரம் முதலான கடல் கடந்த நாடுகட்குச் சென்றபோது நடுக்கடலில் நாவாய் ஒட்டிச் சென்றனர். தொல்காப்பியர் காலத்திற்கு 8ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழர் கடலில் வாணிகம் செய்தனர்.

முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை

என்னும் தொல். நூற்பாவின் மூலம் அக்காலத்துத் தமிழர் கடலில் செலவு செய்யும்போது மகளிரை அழைத்துச் செல்லல் கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர் என்ற உண்மை தெளிகிறது.

பழங்காலத் தமிழர் வருணன் என்னும் தெய்வத்தைக் கடல் தெய்வமாகப் போற்றினர்.

வருணன் மேய பெருமனல் உலகம்

-தொல். அகத்.5.

பின்னர் இந்த வருண வழிபாடு மறையப் பெளத்த மதம் தமிழகத்துக்கு வந்தது. அப்போது அம் மதத்தின் சிறு தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் கடலில் பிரயாணம் செய்கிற நல்லவருக்குத் துன்பம் நேரிட்டால் அது அவர் களுக்கு உதவி செய்து காப்பாற்றுகிறது என்னும் நம்பிக்கை பெளத்த மதத்தில் இருந்தது. பெளத்தம் தமிழகத்தில் பரவிய போது தமிழ்நாட்டு மணிமேகலா தெய்வத்தையும் கடல் தெய்வமாக ஏற்றுக்கொண்டனர்.

கடல் வாணிகம் செய்தவர் நாவிகர் எனப்பட்டனர். கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் எனப் பட்டனர். மாநாவிகர் என்ற பெயர் மருவி மாநாய்கர் என்று வந்திருக்கலாம். சிலப்பதிகாரக் கதை நாயகியின் தந்தை மாநாயகன.